Begin typing your search above and press return to search.
அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா: 2 தாசில்தார் உட்பட 4 பேர் பணியிடைநீக்கம்
தேனியில் தனியாருக்கு அரசு நிலத்தில் பட்டா வழங்கிய 2 தாசில்தார் உட்பட 4 பேரை கலெக்டர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
HIGHLIGHTS

பைல் படம்.
தேனி வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் அமைந்துள்ள மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் இடத்தை ஒட்டி 200 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட நிலத்தை 75 ஏக்கர் என குறைவாக மதிப்பீடு செய்து, தனியாருக்கு பட்டா வழங்கியதாக புகார் எழுந்தது.
பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் இது குறித்து விசாரணை நடத்தினார். இதில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணக்குமார், போடி சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரத்தினமாலா, போடி தேர்தல் துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை தாசில்தார் சஞ்சீவ்காந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
சப்-கலெக்டர் ரிஷப் அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். இவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.