தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்கு திறப்பு

தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் பாசனத்திற்கு திறப்பு
X

மஞ்சளாறு அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி.

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 529 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பின்னர் நடந்த சோத்துப்பாறை அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அணையில் இருந்து விநாடிக்கு 60 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Oct 2021 11:07 AM GMT

Related News