இடுக்கி மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகளால் வெள்ள அபாயம்: தமிழக விவசாயிகள் அச்சம்

இடுக்கி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் கேரளாவில் வெள்ள அபாயம் தொடர்கிறது என தமிழக விவசாயிகள் புகார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இடுக்கி மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகளால் வெள்ள அபாயம்: தமிழக விவசாயிகள் அச்சம்
X

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 21 அணைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. அடுத்து மழை பெய்தால், தற்போது ஏற்பட்டதை விட பெரும் சேதம் ஏற்படும். கேரள அரசு ஆபத்தை உணராமல் விளையாடுகிறது என தமிழக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெரியாறு வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் இது குறித்து கூறியதாவது: முல்லை பெரியாறு அணை நிரம்ப விடாமல் தடுக்கவும், அணைக்கு வரும் நீரை கேரளாவிற்குள் திசை திருப்பி விடவும், முல்லை பெரியாறு நீர்வரத்து பரப்பில் கேரள அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி உள்ளது. இந்த அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

தவிர இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 21 அணைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய அணை இடுக்கி அணை. இதில் மட்டும் 72 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த அணைகளிலும் 250 டி.எம்.சி., தண்ணீர் வரை தற்போது கேரள அரசு சேமித்து உள்ளது. தற்போதய நிலையில் இதில் பாதி தண்ணீரை வெளியேற்றி விட்டு, அடுத்து பெய்யும் மழை நீரை சேமிக்க அணைகளை தயாராக வைக்க வேண்டும். தற்போதே அணைகள் நிரம்பி உள்ளதால், அடுத்து மழை வந்தால் முழு நீரையும் வெளியேற்ற வேண்டி வரும். கடந்த வாரம் இப்படி வெளியேற்றப்பட்ட தண்ணீர் தான் பலரை வெள்ளத்தில் அடித்துச் சென்றது.

இப்போதும் கேரள அரசு அதே தவறினை செய்கிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் வெள்ள அபாயம் இருந்து கொண்டே உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கேரள அரசு தனது மக்களில் பல நுாறு பேரை பலியிடக் கூட தயாராகி வருவது வேதனையாக உள்ளது.

தற்போது தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கி உள்ளது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கினால், தேனி மாவட்டத்திலும், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் அடுத்த போக சாகுபடியை பிரச்னையின்றி எடுக்கலாம். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரள அரசுக்கு பயந்து கொண்டு, தற்போது விநாடிக்கு 2050 கனஅடி தண்ணீரை முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.

தற்போது வைகை அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளதால், தற்போது எடுக்கப்படும் தண்ணீர் வீணாகி விடும். எனவே தண்ணீரை முல்லை பெரியாறு அணையில் இருந்து எடுக்காமல், அணையில் 142 அடி தண்ணீரை சேமிக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Updated On: 23 Oct 2021 7:20 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  என்னாச்சு நித்திக்கு? சாப்பிட முடியலையாம், தூக்கம் வரலையாம்
 2. தமிழ்நாடு
  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு
 3. தமிழ்நாடு
  பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்
 4. ஆவடி
  ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த நபர் கைது
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு...
 6. பொன்னேரி
  அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 10 பேர் கைது
 7. திருவண்ணாமலை
  நரிக்குறவர் சமுதாயத்திற்கு இலவச வீடுகள்: திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு
 8. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 9. சென்னை
  சொன்னா நம்ப மாட்டீங்க! பெட்ரோல், டீசல் விலை 43வது நாளாக மாற்றமில்லை
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி குரூப் 2 தேர்வு: 31,859 பேர் பங்கேற்பு