/* */

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொரானோ நோய் தொற்று காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கோடை மழை காரணமாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. அருவியில் சென்று பார்ப்பதற்கு மட்டும் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

இந்நிலையில் தொடர்ந்து இன்றும் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதாலும், கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் இன்று முதல் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை நீடிக்கும் என தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On: 16 April 2021 5:42 AM GMT

Related News