பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்

நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்
X

கொரோனா ( மாதிரி படம்)

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 100 க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

இது குறித்து பெரியகுளம் நகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தபோது, நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மூடப்படுகிறது. திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டாம். பொதுமக்கள் தங்களது புகாரை நகராட்சி தபால் பெட்டி அல்லது அஞ்சலகம் மூலம் அனுப்பி தீர்வு காணலாம் என்றார். மேலும் தற்சமயம் கொரோனா காலமென்பதால் அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலக பணியாளர்கள் மட்டும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 May 2021 3:52 PM GMT

Related News