கோவிலை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவிலை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
X

பெரியகுளம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த காளியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் நகை, 5 கிலோவில் ஐம்பொன்னால் ஆன சிலையின் முக உருவம் மற்றும் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த உண்டியல் என அனைத்தையும் இரவில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலையில் கோவிலின் பூசாரி பூஜைக்காக வந்த போது கோவிலின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு சிலையில் இருந்த நகை, ஐம்பொன் உருவம் மற்றும் உண்டியல் திருடப்பட்டுள்ளதை பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியினை மேற்கொள்ளாததால் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Feb 2021 7:30 AM GMT

Related News