கணவன் கொலை: விபத்தில் இறந்ததாக மனைவி நாடகம்
பெரியகுளம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடிய மனைவி.
HIGHLIGHTS

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (40) டிராக்டர் வைத்து தொழில் செய்துவருகிறார். இவருக்கு அக்கா தங்கையான பாப்பாத்தி(39) மற்றும் நாகலட்சுமி என இரு மனைவிகள் உள்ளனர். சிவக்குமார் கடந்த 24ஆம் தேதி கொடைக்கானல் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பனைமரத்து ஓடைப்பாலத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு பலியானதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிவக்குமாரின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு விபத்தில் சந்தேகம் இருந்தது.
இது குறித்து தேவதானபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிவக்குமார் மனைவி பாப்பாத்திக்கு சிவகுமாரிடம் வேலை பார்த்து வந்த செல்வராஜ் (41) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை கொலை செய்ய மனைவி பாப்பாத்தி கள்ளக்காதலன் செல்வராஜுடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.
கொலை செய்வதற்காக கள்ளக்காதலன் செல்வராஜின் நண்பரும் சிவக்குமாரிடம் வேலை பார்த்து வந்த அய்யனார் (43) உதவியுள்ளார். இதில் சம்பவத்தன்று செல்வராஜ்க்கு அதிக மதுவை குடிக்க வைத்தது மட்டுமல்லாமல் அய்யனார் இருசக்கர வாகத்தை ஓட்டிய நிலையில் சிவக்குமார் பின்புரம் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தை பாலத்தில் மோத செய்து அதில் சிவக்குமாரை கீழே விழச்செய்த அய்யனார் இருசக்கர வாகத்தில் இருந்து சதுர்யமாக தப்பித்து காயம் அடைந்த சிவக்குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி காவல்துறையினர் சிவக்குமாரின் மனைவி பாப்பத்தி, செல்வராஜ், அய்யனார் என 3 நபர்களையும் கைது செய்து விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பின்பு பெரியகுளம் சார்பு நீதி மன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் துணையுடன் இருசக்கர வாகன விபத்து போன்று ஏற்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.