/* */

தேனி கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு

தேனி நரிக்குறவர் காலனிக்கு சென்ற கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

HIGHLIGHTS

தேனி கலெக்டருக்கு பாசிமாலை  அணிவித்து வரவேற்பு
X

தேனி நரிக்குறவர் காலனியில் கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

நரிக்குறவ பெண் அசுவனியில் பேட்டிக்கு பின்னர் அந்த சமூகத்தின் அடித்தன்மையே மாறிப்போனது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் பெண் அசுவினியை சந்திக்க அவரது வீடு தேடிச் சென்றதும், அடுத்தடுத்து மாவட்ட கலெக்டர்கள் அத்தனை பேரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நரிக்குறவர் காலனிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய தொடங்கி உள்ளனர்.

தேனி கலெக்டர் முரளீதரன் இன்று அன்னஞ்சி ஊராட்சிக்கு (தேனி நகராட்சிக்குள் தான் உள்ளது) உட்பட்ட நரிக்குறவர் காலனிக்கு சென்றார். அங்கு அவரை நரிக்குறவர் இன மக்கள் சிறப்பாக வரவேற்றனர். நரிக்குறவ பெண் ஒருவர் வெள்ளைபாசி மாலையை கலெக்டருக்கு அணிவித்தார். சிரித்துக்கொண்டே மாலையை கழுத்தில் அணிந்து கொண்ட கலெக்டர், ''என் கிட்ட இது போல நிறைய இருக்கு'' என்றார். பின்னர் இந்த மக்கள் கலெக்டருக்கு பொன்னாடை போர்த்தினர்.

வழக்கம் போல் நரி்க்குறவர் காலனியில் அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கலெக்டர் பின்னர் வேறு பகுதியில் தனது ஆய்வு பணியினை தொடர்ந்தார்.

Updated On: 25 Nov 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?