/* */

பரம்பிக்குளம் அணையை உடைத்தது கேரள விஷமிகள்தான்: அதிர்ச்சி தகவல்

பரம்பிக்குளம் அணையின் மதகை உடைத்தது கேரளா விஷமிகளின் சதிவேலை தான் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் புகார்

HIGHLIGHTS

பரம்பிக்குளம் அணையை உடைத்தது  கேரள விஷமிகள்தான்: அதிர்ச்சி தகவல்
X

பரம்பிக்குளம் அணையின் நடுமதகு உடைந்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் நிர்வாகிகள் இ.சலேத்து, பொன் காட்சி கண்ணன், சி.விஜய் மாரீஸ், பா.ராதா கணேசன், மை.ராஜன் தாமஸ் மற்றும் ச. அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையை போலவே, பரம்பிக்குளம் அணையும் கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அதை இயக்கி பராமரிப்பது தமிழக அரசு.பரம்பிக்குளம் அணையிலும் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் கேரள மாநிலம், தற்போது அணையில் இருக்கும் மூன்று ஷட்டர்களில் ஒன்று (புதன்கிழமை காலை) தொழில்நுட்பக் கோளாறால் தானாகவே திறந்து கொண்டதாகவும்,,,வினாடிக்கு 15,000 முதல் 20,000 கன அடி தண்ணீர் வெளியேறுவதாகவும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது.அணையின் 3 ஷட்டர்களும் 10 சென்டிமீட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வரும் நிலையில். நடுப்பகுதியில் உள்ள ஷட்டர் மட்டும் தானே திறந்து கொண்டதாகவும். 25 அடி நீள ஷட்டர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்றும் கதையை கட்டுகிறது கேரளா.

எதிர்பாராத விதமாக வரும் தண்ணீர் முதலில் பெரிங்கல்குத்து அணைக்கும், அதன்பின் சாலக்குடிப்புழாவுக்கும் வந்து சேரும்.இதுதான் இயல்பான வழி. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் வருவதால், பெரிங்கால்குத்து அணையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில்,ஐயகோ சூழ்ந்து விட்டது ஆபத்து என்று மலையாள தினசரிகள் கத்திக்கதறுகின்றன. சாலக்குடிப்புழாவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் ஒரு ஆபத்தும் இல்லை என்கிற நிலையில், அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யாவிட்டால், மொத்தமாக கேரளா மூழ்கப் போவதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது.

திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா வி குமார், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மீன்பிடிக்க அல்லது குளிக்க ஆற்றில் நுழைய வேண்டாம். மாவட்ட அவசர சிகிச்சை மையம் (டிஇஓசி) நீர் வரத்தை கண்காணித்து வருகிறது.

இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஏற்பட்ட இந்த ஷட்டர் உடைப்பு, மலையாளிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டுகிறோம். உலக கட்டுமானத்துறையின் அதிசயம் என்று வர்ணிக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய மூன்று அணைகளும் பிரதான அணைகள். இந்த மூன்றும் கேரள மாநில எல்லைக்குள் இருக்கிறது. ஆனால் அந்த மூன்று அணைகளையும் இயக்கி பராமரிப்பது தமிழக அரசு.

விகிதாச்சார அடிப்படையில் இந்த திட்டத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் கேரளா, வருடா வருடம் தண்ணீரை பங்கிட்டு கொள்ளும் விடயத்தில் பிரச்னை செய்வதும், பிஏபி ஒப்பந்தத்தை புதுப்பிக்க அழைத்தால் வர மறுப்பதும் வழக்கமான நடைமுறை. இந்த நேரத்தில் இந்த விபத்து சாதாரண ஒன்று அல்ல. கேரள விஷமிகள் இதனை செய்து விட்டு முழுப் பழியையும் இப்போது தமிழகத்தின் மீது போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய அணையின் ஷட்டர் உடையும் அளவிற்கா தமிழக பொதுப்பணித்துறை பலம் இழந்து நிற்கிறது என்கிற கேள்வியை முன் வைக்கிறோம். எனவே மத்திய நீர்வள அமைச்சகம், இந்த ஷட்டர் உடைப்பு குறித்து தேசிய அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Updated On: 22 Sep 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  2. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  3. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  4. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  5. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  7. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  8. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  10. கிணத்துக்கடவு
    குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது