/* */

ஒரு லட்சம் பேருக்கு ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர்: மக்கள் அவதி

ஒரு லட்சம் பேருக்கு ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே பணியில் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஒரு லட்சம் பேருக்கு ஒரே ஒரு  கிராம நிர்வாக அலுவலர்:  மக்கள் அவதி
X

தேனி நகராட்சியின் மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்குப்படியே ஒரு லட்சத்தை எட்டியது. தற்போது இன்னும் 10 சதவீதம் வரை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர். அவருக்கு இரண்டு ஓ.ஏ க்கள் மட்டுமே உள்ளனர்.

ஜாதிச்சான்று, திருமண சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், தரிசு நிலம், விதவை சான்று, ஆதரவற்ற விதவை சான்று என அரசு வழங்கும் எந்த சான்றுகளாக இருந்தாலும் வி.ஏ.ஓ.விடம் இருந்து தான் தொடங்க வேண்டும். காப்பீடு திட்டம் முதல் ரேஷன் கடை வரை வி.ஏ.ஓ. அனுமதியின்றி எதுவுமே நடக்காது. இது தவிர அவ்வப்போது அரசு வழங்கும் அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்.

மழை பெய்தால் கண்மாய்களை கண்காணிப்பது முதல், அனாதை பிணங்கள் வரை அத்தனையும் வி.ஏ.ஓ. பொறுப்பில் தான் உள்ளது. எனவே பணிச்சுமை, மனஅழுத்தம் காரணமாக தேனி வி.ஏ.ஓ.வும், அவரது பணியாளர்களும் திணறி வருகின்றனர். இந்த சிக்கலை தீர்க்க வி.ஏ.ஓ. நிர்வாக பகுதிகளுக்கான எல்லை வரையரையினை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயித்து மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Jun 2022 8:14 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு