/* */

கேரளாவின் நம்பர் 2 கோவிந்தன் மாஸ்டருக்கு தமிழக விவசாயிகள் அழைப்பு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து பேச கேரளாவின் நம்பர்2 கோவிந்தன் மாஸ்டருக்கு தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கேரளாவின் நம்பர் 2   கோவிந்தன் மாஸ்டருக்கு தமிழக விவசாயிகள் அழைப்பு
X
மாஸ்டர் கோவிந்தன்.

கோவிந்தன் மாஸ்டர் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் நம்பிக்கைக் குரிய நம்பர் 2 ஆவார். தோழர் பினராயியின் நெருக்கடி மேலாளராக அறியப்பட்ட, கண்ணூரைச் சேர்ந்த 69 வயதான கொடியேரி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு பதவியேற்றிருக்கிறார் இந்த மாஸ்டர்.

கோவிந்தனைத் தேர்வு செய்ததன் மூலம், கண்ணூர் ஏரியாவில் இருந்து மாநிலச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முப்பதாண்டுப் பாரம்பரியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துள்ளது.

69 வயதான கோவிந்தன், மூன்று முறை எம்.எல்.ஏ., தற்போது பினராயி விஜயன் அரசாங்கத்தில் இரண்டாவது-தலைவராக உள்ளார். கேரள மாநில அமைச்சரவையில் உள்ளாட்சி கலால் துறைகளை கையாளுகிறார்.

கோவிந்தன் ஒரு காலத்தில் உடற்கல்வி ஆசிரியராக இருந்ததால் "மாஸ்டர்" என்று குறிப்பிடப்படுகிறார். கண்ணூரில், கோவிந்தன் முழுநேர அரசியலைத் தழுவுவதற்காக விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக "சிவப்பு தொண்டர்" படைக்கு தலைமை தாங்கினார். இருப்பினும், அவர் சி.பி.ஐ.(எம்) கேடருக்கு ஆசிரியராக இருக்கிறார் மற்றும் கட்சி வகுப்பறைகளில் மார்க்சியத்தை கற்பிக்கிறார்.

தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள இ.எம்.எஸ் அகாடமியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார், இது 2001 ஆம் ஆண்டு சி.பி.ஐ.(எம்) மாநிலக் குழுவால் நிறுவப்பட்டது.

கோவிந்தன் நெருக்கடி மேலாண்மைத் திறமைக்கு பெயர் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், சி.பி.ஐ. (எம்) எர்ணாகுளம் மாவட்டக் குழு கோஷ்டி பூசல் மற்றும் ஊழல்களில் சிக்கியபோது அவர் சிறப்பாக செயல்பட்டார். நாம் கோவிந்தன் மாஸ்டருக்கு வாழ்த்து கூற கடமைப்பட்டு இருக்கிறோம். வாழ்த்துக்கள் தோழர்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் ஒரு மனம் திறந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் தயார் என்றால் அதை தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் தம்பி ராஜா மூலமாக தெரியப்படுத்த வேண்டுகிறோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On: 30 Aug 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  6. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  7. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  8. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  9. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து