/* */

தேசிய சினிமா தினம்: செப்டம்பர் 16ல் சினிமா பார்க்க வாரீங்களா...!

வரும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து நாடு முழுவதும் டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

தேசிய சினிமா தினம்: செப்டம்பர் 16ல் சினிமா பார்க்க வாரீங்களா...!
X

பைல் படம்.

அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது. இந்த வார இறுதியில் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைபிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16 ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐநாக்ஸ், பிவிஆர், சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்கங்கள் இந்த தேசிய சினிமா தினத்தில் கலந்து கொள்கின்றன.

அதை ஒட்டி அன்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் சுமார் 4000 தியேட்டர்கள் (இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும்) தங்கள் திரையரங்கில் டிக்கெட்டுகள் விலையை ரூ.75க்கு விற்பனை செய்ய சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் தளங்கள் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலையுடன் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

திரையரங்குகளில் சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டும் ரூ.75க்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வாங்க... செப்டம்பர் 16ம் தேதி மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்த கட்டணத்தில் நமக்கு பிடித்த சினிமா படங்களை பார்த்து ரசிப்போம். அன்றைய தினம் திரையிடப்படும் அனைத்து காட்சிகளிலும் இந்த கட்டண சலுகை இருக்கும் என்பது கூடுதல் சர்ப்ரைஸ்.

Updated On: 3 Sep 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு