/* */

முல்லை பெரியாறு அணையில் 152 அடி: கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்

முல்லை பெரியாறு அணையில், 152 அடி நீர் தேக்க வலியறுத்தி, கூடலூரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் 152 அடி:  கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்
X

கூடலுாரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு அணையில், நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும், 1300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மதுரை குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதை நிறுத்தி, கால்வாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகளை வலியுறுத்தி, கூடலூரில் வரும் இன்று விவசாயிகள் 152 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் அடுப்பு, விறகு, பொங்கல் வைக்க தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் தயாராக வைத்திருந்தனர். பெண்கள் பொங்கல் பானைகளுடன் மட்டும் வந்தனர். கூடலுார் பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் ரோட்டோரம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர். கூடலுார் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 4 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு