/* */

காஷ்மீரில் மிக் 29 UPG படையணி... இந்தியா அடுத்த அதிரடி

MIG 29 India -காஷ்மீரில் கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நடைபெற்று உள்ளன

HIGHLIGHTS

காஷ்மீரில் மிக் 29 UPG படையணி... இந்தியா அடுத்த அதிரடி
X

MIG 29 India -இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து கொண்டு நாடு திரும்பிய நிலையில் அமெரிக்காவின் பாகிஸ்தானுக்கான தூதர் டொனால்ட் ப்ளோம் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் தீடீர் விஜயம் செய்தார். ஆஸாத் காஷ்மீர் என்றெல்லாம் உளறி கொட்டிவிட்டு சென்றிருக்கிறார். ஜோ பைடன் நிர்வாகத்தில் இது இரண்டாவது முறை.

ஏன்..? எதற்காக.யாருக்காக, ஒருத்தரும் வாயே திறக்கவில்லை. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் பல விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டு திரும்பினார்.

அதில் பலராலும் விவாதிக்கப்பட்ட வாதம் ஒன்று. இந்தியாவும் சரி பாகிஸ்தானும் சரி IT துறையில் மிகப்பெரிய அளவில் கோலோச்சுகிறார்கள். என்ன ஒன்று இந்தியர்கள் IT என்பதை இன்ஃப்ர்மேஷன் டெக்னாலஜி சார்ந்தும், பாகிஸ்தானோ இன்டர்நேஷனல் டெரரிஸசத்தையும் வளர்த்தும் வருகிறது. இதில் நீங்கள் (அமெரிக்கர்கள்..) யார் பக்கம் என்பதை தான் பேசி இருந்தார். இதனை ஜோபைடன் தரப்பு ரசிக்கவில்லை..., தவிர தங்களை தங்கள் நாட்டில் வைத்தே கேலி செய்து விட்டதாக பொருமிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் இந்த தீடீர் விஜயம் என்கிறார்கள். ஒரு பக்கம் அது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில். இந்திய தரப்பில் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மிக் 21 ரக விமானங்களை கொண்ட படையணியை கலைத்து விட்டு அதே இடத்தில் மிக் 29 UPG என்கிற விமானங்கள் கொண்ட ஸ்குவாட்ரன்களை ஏற்படுத்தி நிறுத்தி இருக்கிறது இந்திய அரசு. இந்த ரக விமானங்கள் நம் வசம் இந்திய கடற்படை கப்பல் மேல் தளத்தில் வைத்து இயக்க தேர்வு செய்து வாங்கியிருந்த ரஷ்ய தயாரிப்பு புதிய விமான ரகங்கள் தான். ஓர் வகையான கணக்கீடு மற்றும் ஓர் வகையான ராணுவ ராஜதந்திர திட்டமிடல் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.

சரியாக சொன்னால் இந்த ரக விமானங்களை இங்கு நிலைநிறுத்தி வைப்பதாலேயே. பாகிஸ்தான் வசம் உள்ள அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு F16 ரக விமானங்களையே நேரிடையாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என நம் இந்திய தரப்பில் உணர்த்தியிருக்கிறார்கள். காலத்தால் முந்தியது என்ற போதிலும். சரியாக சொன்னால் 1950 களில் வெளிவந்த ரஷ்ய மிக்கியோன் நிறுவன தயாரிப்பு மிக்-21 ஐ கொண்டே, F16 ரக விமானங்களை எதிர் கொண்டு அடித்து வீழ்த்த முடிகிறது என்றால், தற்போது புதியதாக களமிறக்கிய மிக் 29 UPGயை என்ன செய்ய போகிறீர்கள் என கேட்காமல் கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இந்தியர்கள்.

அமெரிக்க பாகிஸ்தான் இடையே ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு எதிராக அல்லது இந்திய எல்லையை நோக்கி F16 ரக விமானங்களை எந்த காலத்திலும் இயக்க கூடாது என்கிற விதிமுறைகளே இருக்கின்றன. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் பல தடவைகள் மீறப்பட்டுள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமாயின் விமானங்களை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் என்கிற ஷரத்தே அதில் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கிறது அப்படியான நிலையில் தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள 85 எண்ணிக்கையிலான F16 ரக விமானங்களை அவர்கள் கேட்காமலேயே அமெரிக்கா தனது செலவில் தரம் உயர்த்தி தருகிறது. இதனை தான் நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டித்திருக்கிறார். ஆனாலும் அமெரிக்கா தன் அழிச்சாட்டியங்களை நிறுத்தி கொள்ளவில்லை.

ரஷ்ய மிக்கியோன் நிறுவன தயாரிப்பு விமானங்கள் மீது இந்தியாவிற்கு அலாதியான ஈடுபாடு உண்டு. பாகிஸ்தானுக்கு அதீத பயம் உண்டு. ஏனெனில் கடந்த கால வரலாறு அப்படி. மிக் 21, மிக் 23, மிக் 25 இதோ மிக் 29 ரக விமானங்கள் வரை நாம் வாங்கி பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். ஒவ்வொன்றும் பல விதங்களில் அட்டகாசங்களை செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மிக் 25 உலக அளவில் பெயர் பெற்ற ஆகச் சிறந்த இடைமறிப்பு விமான ரகங்கள் (interceptors) ஆகும்.

1965 களிலேயே வெளிவந்த போதிலும், இன்று வரை இதற்கு அருகில் கூட மற்றைய விமானங்கள் வரவில்லை எனும் அளவுக்கு பெயர் பெற்றது இவை. இதன் அடுத்த ரகம் தான் மிக் 31 . ரஷ்யா மாத்திரமே இன்று வரை பயன்படுத்தி வருகிறது.. தனது அதிநவீன ஹைப்பர் சோனிக் ரக ஏவுகணைகளை இதில் பொருத்தி வைத்து சென்றுக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இத்தனைக்கும் இந்த ரக விமானங்களை 1968 -ஆம் ஆண்டுகளிலேயே வெளிக்கொண்டு வந்துவிட்டது.

நம் இந்திய தரப்பில் மிக் 25 மற்றும் மிக் 23 ரக விமானங்களை தற்சமயம் பயன்படுத்தவில்லை என்ற போதிலும் நம் வசம் பயன்பாட்டில் இருந்த சமயத்தில் பற்பல காரியங்களுக்கு அநாயாசமாக பயன் படுத்தி வந்திருக்கிறோம். மிக முக்கியமாக பாகிஸ்தான் வான் எல்லைக்கு மேலாக அதிக உயரத்தில் கிட்டதட்ட 65,000 அடி உயரத்தில் இருந்து உளவு பார்க்கும் வேலைகளில் பல சமயங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் யாருக்கும் தெரியாமல் இப்பொழுது அதி நவீன உளவு சாதனங்களை கொண்ட செயற்கை கோள்கள் வானில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் 80 களில் ஆபத்பாந்தவன் இந்த மிக் ரக விமானங்கள் தான்.

தனது கடைசி பறத்தலின் போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மேலே தாழப்பறந்து சோனிக் பூம்களை உருவாக்கி அதிரடித்திருக்கிறார்கள். வானில் எழுந்த இந்த சத்தத்திற்கு பாகிஸ்தானிய உச்சபட்ச அதிகாரம் கொண்ட அனைவருமே அரண்டு போனார்கள் அன்று.. இவை ஆவணப்பதிவுகளாக இன்றளவும் இணையத்திலேயே கிடைக்கிறது. இங்கே மற்றோர் சுவாரசியம் சொல்வர்..

நம் வசம் இந்திய பயன்பாட்டில் இருந்து பின்னர் ஓய்வு கொடுக்கப்பட்ட மிக் 23 விமானம் ஒன்றை இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்று OLX மூலமாக விற்பனை செய்ய இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் விலையும் பத்து கோடி என்றெல்லாம் பகடி செய்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.. பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள். அதாவது பல்கலைக்கழகத்தின் இணையத்தில் யாரோ மர்ம நபர்கள் ஊடுருவல் செய்து விட்டதாக அறிக்கை வெளியிட்டு காணாமல் போனவர்கள்.

பாகிஸ்தான் தரப்பில் அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு விமானங்களின் மீது ஈர்ப்பு இல்லை. ஆதலால் தான் அமெரிக்கா பாகிஸ்தான் வசம் உள்ள F16 ரக விமானங்களை மேம்படுத்தி தர உத்தேசித்து இருப்பதாக சொன்ன போதும் பாகிஸ்தான் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.அதேசமயம் நம் இந்திய தரப்பில் பெரிய அளவில் கண்டனங்களை தெரிவிக்காமல்.. அதற்கு மாற்றீடாக மிக் 29 UPG கொண்ட படையணியை ஏற்படுத்தி நிலை நிறுத்தி வைத்து அதிரடி கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!