/* */

தமிழகம்- கேரளாவில் ஒரே நேரத்தில் ஊரடங்கு: வெறிச்சோடிய சோதனைச்சாவடிகள்

தமிழகம், கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இருமாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.

HIGHLIGHTS

தமிழகம்- கேரளாவில் ஒரே நேரத்தில் ஊரடங்கு:  வெறிச்சோடிய சோதனைச்சாவடிகள்
X

போடி குரங்கனியில் உள்ள தமிழக போலீஸ் சோதனை சாவடி ஊரடங்கால் மூடப்பட்டது.

தமிழகத்தில் இன்று மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கேரளாவில் ஒரே நேரத்தில் இந்த வாரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இரு மாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டன.

கனரக வாகனங்கள் கூட சோதனைச்சாவடிகளுக்கு அருகேயே நிறுத்தப்பட்டன. எந்த ஒரு வாகனமும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாளை காலை 6 மணிக்கு மேல் தான், ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் அதுவரை வந்த சரக்கு, மற்றும் போக்குவரத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

இந்நிலையில் இரண்டு முழு ஊரடங்களில் 100 சதவீதம் ஒத்துழைப்பை வழங்கிய மக்கள், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. தேனி மாவட்டத்தில் அத்தனை நகராட்சிகள், பேரூராட்சிகளி்ல மெயின் ரோடுகள் முழுக்க வெறிச்சோடி கிடந்தன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் வசிப்பிட பகுதிக்குள் இயல்பான நிலையே காணப்பட்டது. பலசரக்கு கடைகளில் கூட அவ்வப்போது திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. கிராமங்களில் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டாலும், வீதிகள் இயல்பான நிலையிலேயே காணப்பட்டன.

Updated On: 23 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்