/* */

கேரள போக்குவரத்துத்துறை அராஜகம்: மகளின் கண்முன்னே தந்தை மீது தாக்குதல்

Kerala Transport corporation -கேரளா அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் கல்லூரி மாணவியான மகளின் கண் முன்னே தந்தையை கொடூரமாக தாக்குதல் நடத்தும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

HIGHLIGHTS

கேரள போக்குவரத்துத்துறை அராஜகம்:  மகளின் கண்முன்னே தந்தை மீது தாக்குதல்
X

பிரேமானந்தனை தாக்கப்படும் காட்சி. தடுக்க முயற்சிப்பவர் மகள்.

Kerala Transport Corporation -கேரளா மாநிலம் காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் பிரேமானந்தன். இவர் கல்லூரியில் படிக்கும் தனது மகளுடன் காட்டாக்கடை அரசு போக்குவரத்து துறை பணிமனையின் அலுவலகத்தில் மகளின் பேருந்து பயண கன்சஷக்சன் புதுப்பிக்க சென்றார். அப்பொழுது அங்கிருந்த ஊழியர்கள் பிரேமானந்தன் அளித்த புதுப்பித்தல் மனுவை பெற்று கொள்ளாமல் காலதாமதம் செய்தனர். இதனை தொடர்ந்து பிரேமானந்தன் உங்களை போன்ற ஊழியர்களால் தான் அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் ஆத்திரம் அடைந்த அங்கு நின்ற பாதுகாப்பு ஊழியர் மற்றும் போக்குவரத்துதுறை ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பிரேமானந்தனை அவரது மகளின் கண் முன்னே தாக்கியதோடு இழுத்து சென்று அறைக்குள் கொண்டு சென்று கதவை பூட்டிக் கொண்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை பார்த்த மகள் கதறி அழுது கொண்டே தாக்குதலை தடுக்க முயன்றும் அதனை கண்டு கொள்ளாமல் கொடூரமாக தாக்குதலை தொடர்ந்தனர். பிரேமானந்தனும் மகளின் கண் முன்னே வைத்து தன்னை அடிக்காதீர்கள் என கதறியும் கண்டுக்கொள்ளாமல் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொது மக்கள் மொபைல் போனில் பதிவு செய்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கூறுகையில், 'பொதுமக்கள் மீது போக்குவரத்துதுறை ஊழியர்கள் நடத்திய இந்த தாக்குதல் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாத செயல். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தாக்குதலுக்கு ஆளான பிரேமானந்தன் தற்போது காட்டாக்கடை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்டாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி