/* */

மோடிக்கு சல்யூட் அடித்த பைடன்..! ஜி 20 மாநாட்டில் நடந்தது என்ன..?

மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சல்யூட் அடித்தார் என உலக ஊடகங்கள் ஒருபக்க செய்தி வெளியிட்டன

HIGHLIGHTS

மோடிக்கு சல்யூட் அடித்த பைடன்..!  ஜி 20 மாநாட்டில் நடந்தது என்ன..?
X

பிரதமர் மோடியுன் அமெரிக்க அதிபர் ஜோபிடன்.

கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற இந்தியா உலகில் தனி கௌரவமும் தனி இடத்தையும் பெற்றுள்ளது. உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த விஷயத்தை தலைப்பு செய்தியாக்கி உள்ளன. ஆனால் விஷயம் மிக மிக வலுவானது, பாரத பெருநாடு இதுவரை அடைந்திராத உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

பொதுவாக உலக மாநாடுகளெல்லாம் யார் அதிகாரமிக்கவர்கள் என காட்ட நடத்தப்படும் மாநாடு என்பது இன்னொரு கோணம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒவ்வொருநாடும் தன் பலத்தை காட்டிவிட்டுத்தான் வரும் இது ராஜதந்திர அரசியல்.

அப்படியான நிலையில், இந்த ஜி20 மாநாடு உலக அரங்கில் ரஷ்யா தவற விட்ட இரண்டாம் இடத்தை பிடிப்பது யார் என்பதை காட்டும் மாநாடாக அமைந்தது. அந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக அதாவது ரஷ்யா, தற்போது நடந்து வரும் போரில், உக்ரைனின் பொதுமக்களின் குடியிருப்புகள், அணைகள், மின் நிலையங்களை இலக்காகக்கொண்டு தாக்குவதை கண்டித்தும் போரை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்தும், ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இதனை அனைத்து நாடுகளும் ஏற்றால்தான் தீர்மானம் வெற்றி பெறும்.

இந்த இடத்தில் சீனாதான் உலக செல்வாக்கான நாடு என்பதை காட்டும் விதமாக தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் பரமபதம் ஆடியது. தன் மறைமுக பலத்தினால் அதை செய்ய முயன்றது. அப்படி தீர்மானம் நிறைவேறாமல் போயிருந்தால், அது அமெரிக்காவிற்கு பெரும் அவமானமாக அமைந்திருக்கும். சீனாவின் பலமும் கூடியிருக்கும்.

தீர்மானத்தை சில நாடுகள் ஏற்க தயங்கின. அதாவது அர்ஜென்டினா, மெக்ஸிகோ, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் எப்பொழுதும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை கொண்டவை. ஆனால், உக்ரைன் போரில் என்னதான் பின்னடைவு இருந்தாலும், உலகின் மிகப்பெரிய நாடு, ஏராளமான எண்ணெய் வளமும் விவசாய வளமும் பல்லாயிரம் அணு குண்டுகளை கொண்ட பிரமாண்ட பலமும், உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் திறனும் கொண்ட ரஷ்யாவினை பகைக்கத் தயங்கின.

இதனால் தீர்மானம் தோல்வியடைக்கூடிய சூழ்நிலை நிலையில், மோடியின் உதவியினை நாடியது அமெரிக்கா. இந்தியா ரஷ்யாவை அதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. சீனாவும் இது உக்ரைன் விவகாரம், சர்ச்சை என சொன்னதே தவிர போர் என்று கூட சொன்னதில்லை.

சில மாதங்களுக்கு முன் மோடி ராஜதந்திரமாக "இது போருக்கான காலம் அல்ல" என்று மட்டும் ரஷ்யாவுக்கு சொல்லியிருந்தார். இப்பொழுது அமெரிக்காவா? சீனாவா? என மோதிய நிலையில் மோடி களம் புகுந்தார். அவர் வந்ததும் இந்த தயக்கத்தில் இருந்த நாடுகள் பணிந்தன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா என சலித்து விட்ட நாடுகள் மோடி என்பவரின் வார்த்தைக்கு கட்டுபட்டன. "மோடி எனும் மாமனிதர் எது சொன்னாலும் சரியாக இருக்கும், நாங்கள் அவரை நம்புகின்றோம்" என சுமார் 15 நாடுகள் மோடி பக்கம் வந்தன.

அமெரிக்க அணி வலுப்பெற்றது. இங்கு இதற்குமேலும் நாம் தனித்து நின்றால் அவமானப்படுவோம் என உணர்ந்த சீனா மோடி பின்னால் வந்தது. விளைவு மோடி எனும் மனிதர் உலகின் பிரம்மாண்ட சக்தியாக எழுந்துள்ளார். தீர்மானம் ரஷ்யாவுக்கு எதிராக நிறைவேறியது.

இதனை ரஷ்யா பகைக்க முடியுமா என்றால் முடியாது. காரணம் ரஷ்யாவின் எண்ணெய் சந்தை இந்தியா கையில் இருக்கும் நிலையில், ரஷ்யா இந்தியாவினை பகைப்பது தற்கொலைக்கு சமமானது என்பதால், ரஷ்யாவின் பக்கம் எந்த சலசலப்பும் இல்லை. உலகின் முடிவினை தீர்மானிக்கும் நாடு இந்தியா எனும் தகுதியினையும், உலகில் அமெரிக்காவினை அடுத்து செல்வாக்கான நாடு இந்தியா என்பதையும் நிருபித்தார் மோடி. இதனாலே மோடிக்கு சல்யூட் அடித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இது மிகப்பெரிய கௌரவம்.

அந்த அரங்கில் ரஷ்யாவுக்கு எதிராக உலகை திரட்ட முடியும் என தன் பலத்தை காட்டிய மோடி , இந்தியா திரும்பியதும் செய்த விஷயம் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்திய பணத்துக்கு மாற்றி அறிவித்தது. அதாவது இது குழப்பமல்ல, சந்தர்ப்பவாதம் அல்ல, முழு ராஜதந்திரம், புரிந்து கொள்ள கொஞ்சம் சிக்கலான ராஜதந்திரம்.

"எங்களுக்கு அணியும் பலமும் நண்பனும் நட்பும் முக்கியம் அல்ல, நாட்டுக்கு எது சரியோ அதுதான் முக்கியம்" என செய்திருக்கின்றார் மோடி. ஜி20 அமைப்பில் பலமாக தன்னை நிரூபித்த மோடி அங்கும் இந்தியாவின் பலத்தை காட்டிவிட்டு, இன்னொரு பக்கம் ரஷ்யாவுடன் உறவு முறியவில்லை என்பதையும் காட்டுகின்றார்.

உலகம் எடுக்கும் முடிவின்படி ரஷ்யாவின் நடவடிக்கையினை இந்தியா கண்டிக்கின்றது. ரஷ்யாவின் அடாவடி போரை இந்தியா எதிர்க்கின்றது. ஆனால் தனிபட்ட வகையில் அதனுடன் வியாபாரத்தை இந்தியா தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் இரு பக்கமும், தன்னால் சமாளிக்கும் வலிமை இருக்கின்றது என நிரூபித்துக் காட்டிவிட்டு திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி.

உலக அரங்கில் மோடி சொன்ன "இது போருக்கான காலம் அல்ல" எனும் வார்த்தை எதிரொலிக்கின்றது. ஜி20 தீர்மானப்படியும், உலகிற்கு மோடி சொன்னபடியும் "இது போருக்கான காலம் அல்ல" எனும் வார்த்தை மிக பெரிதாக ஒலிக்கின்றது. மோடியின் வார்த்தை பைடன், ரிஷி சுனக், மேக்ரோன் எனும் பல உலக தலைவர்களால் திருப்பி திருப்பி சொல்லப்படுகின்றது. ஜி20 மாநாட்டில் உலகில் தன் செல்வாக்கை நிரூபித்து, அமெரிக்காவுக்கு கட்டுப்படாத தேசங்களை தனக்கு கட்டுப்பட வைத்து தன் செல்வாக்கை காட்டிய மோடிக்கு வேறு வழியின்றி சல்யூட் அடித்தார் ஜோபைடன்.

Updated On: 20 Nov 2022 8:03 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  2. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  5. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  6. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  9. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...
  10. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?