/* */

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 187பேர் பணி நியமனம் பெற்றனர்.

HIGHLIGHTS

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
X

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நான் முதல்வர் இயக்கம் இணைந்து மாவட்ட அளவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தினர். தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து 28 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது.

முகாமில் கலந்து கொண்ட வேலை நாடுநர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளை நடத்தினர். முகாமில் மொத்தம் 306 பேர் பங்கேற்றனர். இதில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வில் வெற்றி பெற்று 187 பேர் பணியில் சேருவதற்கான உத்தரவுகளை பெற்றனர். 119 பேர் இரண்டாம் கட்ட தேர்ச்சி நிலைக்கு இடம் பெற்றனர்.

இந்த முகாமில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் செல்வராஜ், நான் முதல்வன் திட்டத்தின் தலைவர் கல்யாண்குமார், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் காசிபிரபு, ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா சங்கர், சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு இயக்குனர் சரண்யா, வேலை வாய்ப்பு துறைத்தலைவர் அகிலா வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 11 Jun 2023 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு