/* */

ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகம் நிறுத்தப்பட்டது ஏன் ?

ரூபாய் மூலம் உலக வர்த்தகம் செய்ய, இந்தியா தனது ஏற்றுமதியினை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.

HIGHLIGHTS

ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகம் நிறுத்தப்பட்டது ஏன் ?
X

பைல் படம்

அமெரிக்கா ரஷ்யாவை உக்ரைன் போருக்காக பொருளாதார ரீதியாக தடை செய்ய, அதன் SWIFT Network எனும் அமைப்பு ரஷ்யாவின் உலக டாலர் பரிமாற்றத்தை தடுத்தது. அதனால் ரஷ்யா உலகளவில் டாலர் மூலம் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அமெரிக்காவில் இருந்த ரஷ்ய வங்கிகளின் 650 Billion டாலரை அமெரிக்கா முடக்கியது என்பதைவிட திருடியது என்பதே சரி.

அதனால் ரஷ்யாவுடன் வியாபாரம் செய்பவர்கள் அதற்கு மாற்றாக ரூபிள் பயன்படுத்த சொன்னது. ஆனால் அதற்கான வர்த்தகத்தை செய்ய அதனிடம் SWIFT போல ஒரு மாற்று அமைப்பு இல்லாததால் அதை செய்ய இயலவில்லை. எனவே மாற்று கரன்ஸி ஒன்றை ரஷ்யா தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகில் பல நாடுகள், குறிப்பாக ரஷ்யாவிடம் Gas, Crude oil முதல் யுரேனியம் வரை வாங்கியது. அதனால் அதிகம் வாங்கும் நாடுகளின் கரன்ஸியை, டாலருக்கு பதிலாக அவர்கள் கரன்ஸியிலேயே வாங்க சம்மதித்தது. அதனால் இந்தியா ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கியது. அதற்கு மாறாக ரஷ்யா நம்மிட வேறு ஏதாவது வாங்கினால் தானே அந்த பணத்தை செலவளிக்க முடியும்!

ஆனால் இந்தியா ரஷ்யாவிற்கு மிக குறைவாக ஏற்றுமதி செய்ததால். ரஷ்யாவிடம் ரூபாய் நிறைய சேர்ந்து விட்டது. அதனால் செலவு செய்ய முடியவில்லை. அந்த வர்த்தக வியாபாரத்தில் இருக்கும் இந்த வித்தியாசத்தை Trade Deficit என்று சொல்வார்கள். அதே சமயம் அதற்கு செலவு செய்யவும் வேறு கரன்ஸி இல்லை. எனவே இப்போது ரஷ்யா ரூபாயில் வர்த்தகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

அதை சமாளிக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று இந்தியா தனது ஏற்றுமதியை ரஷ்யாவிற்கு அதிகரிப்பது. அதன் மூலம் நாம் கொடுக்கின்ற ரூபாயை நமக்கே திருப்பி கொடுத்து வேறு பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அதனால் இந்த Trade Deficit குறையும், ரூபாய் தேங்காது. இதை சென்ற ஆண்டே இரு நாடுகளும் எதிர்பார்த்ததால், அதற்கான வர்த்தகத்தை ஊக்குவிக்க சில தீர்வுகளை முன் வைத்தது. NATO நாடுகளிடம் ரஷ்யா பல பொருட்களை வாங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பொருட்களை இந்தியாவிடம் இருந்த வாங்க முடிவு செய்தது. அதன்படி Alumina என்ற அலுமினியத்தை இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, உக்ரைன் இடம் இருந்து இறக்குமதி செய்தது. இந்தியாவிடம் இருந்து ஒரு டன் கூட இறக்குமதி செய்ததில்லை. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 2.68 லட்சம் டன் அலுமினியத்தை இந்தியா ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும் அதுபோல 90 க்கும் மேற்பட்ட பொருட்களை இந்தியாவிடம் இருந்து ரஷ்யா வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளது. அதில் பல பொருட்கள் தேவை ரஷ்யாவிற்கு அதிகம் இருக்க, அதன் உற்பத்தி நம்மிடம் குறைந்த அளவில் இருக்கிறது, அதை உயர்த்த வேண்டும். சில பொருட்களை நம்மால் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால் சில பொருட்கள் ரஷ்யாவின் தேவைக்கான வகையில் தொழிற்சாலைகள் மாற்றி அமைக்க அல்லது அதிகரிக்க வேண்டும். இன்னும் சில துறைகளில் தொழிற்சாலைகளை நாம் புதியதாக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, உலகில் 80% சரக்கு கப்பல்களை சீனா உற்பத்தி செய்கிறது. இப்போது இந்தியாவிற்கு பெரிய கப்பல்களை செய்யும் தொழில் நுட்பத்தை தர ரஷ்யா சம்மதித்து உள்ளது. முன்பு International Treaty என்ற பெயரில், ரஷ்யா அதை இந்தியாவிற்கு கொடுக்க முடியாமல் அமெரிக்கா தடுத்தது. இன்று அது முடியாமல் போனதால், இந்திய புதிய நுட்பங்களை இந்தியா எளிதாக பெறுகிறது.

இதனால் பல ஆர்டர்களை அமெரிக்க கூட்டமைப்பு நாடுகள் இழக்கும் என்பதால், ரஷ்யா அதை கொடுக்குமுன், தாங்கள NATO நாடுகள் அதை இந்தியாவிற்கு கொடுக்க முன் வருகிறார்கள். உதாரணமாக, ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி, விமானத்திற்கு தேவையான உலகின் மிக பலமான எஞ்சின்களை உற்பத்தி செய்யும் அந்த கம்பெனி, முன்பு சக்தி வய்ந்த எஞ்சின்களை இந்தியாவிற்கு கொடுக்க மறுத்தது.

இப்போது ரஷ்யா அந்த தொழில் நுட்பத்தை கொடுத்து விட்டால், இந்தியா தம்மிடம் வாங்காது என்பது மட்டுமல்ல, அதே எஞ்சினை விலை குறைவாக தயாரித்து உலகில் விற்கும் என்றால், வருங்காலத்தில் அந்த கம்பெனியை மூட வேண்டிய சூழல் ஏற்படலாம். இதை கேட்டவுடன் பிரான்ஸ், தானும் தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு தருகிறேன், நீங்கள் உங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது.

ஆம், நம் உள்நாட்டில், சென்னையில் தயாரித்த வந்தே பாரத் என்ற Train 18 மேற்கத்திய நாடுகளை விட வலிமையானது. உயர் தொழில் நுட்பம் கொண்டது. பராமரிப்பு செலவு குறைவு. பாதி விலைக்கு கிடைக்கிறது எனும்போது யார் அவர்களிடம் வாங்குவார்கள். இன்று 800 ட்ரெய்ன்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆர்டர் ரெடியாக உள்ளது. மேலும் ஆர்டர்கள் வருகிறது, ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அதனால் இந்திய ரயில்வே அதன் தொழிற்சாலையை சென்னையை தவிர, இரண்டு இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது. அதில் ஒன்று ரேபேலி என்ற சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது.

எனவே இந்தியா இது போன்ற வகையில் நிறைய உற்பத்தியை தொடங்க வேண்டும். ஆனால் அதை தொடங்க நம்மிடம் அனுபவம் உடைய ஆட்கள் இல்லை. நிறுவனங்கள் இல்லை என்பதால் ரிஸ்க அதிகம். எனவே அது போன்ற தொழிகளை அம்பானி, அதானி போன்ற நிறுவனங்கள் ரிஸ்க் எடுத்து செய்கிறது. அதனால் அவர்கள் வளர்ச்சி வேகமாக வளர்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஏற்றுமதி அதிகரிக்கும். அதை தடுக்கத்தான், அமெரிக்கா அம்பானி குரூப்பை நசுக்க பார்க்கிறது.

இப்போதே உக்ரைனுக்கு எதிரான போருக்கு பயன்படுத்த இந்தியாவினை ஆயுத சப்ளை செய்யச்சொல்லி கேட்கிறது ரஷ்யா. உதாரணமாக ஏவுகணைகள் அதிகம் கேட்கிறது. ஆனால் நாம் போர் வேண்டாம் என்று சொல்வதால் அதை ஏற்றுமதி செய்ய மறுக்கிறோம். ஆனால் நமது தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் தரம் உயர்ந்தது. விலை குறைந்தது. ஆனால் அந்த விமானங்களை இன்னும் எந்த நாடுகளும் போரில் பயன்படுத்தியதில்லை என்பதால், அதன் செயல் போர்க்களத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாததால் வாங்க மறுக்கிறார்கள். எனவே நம் கொள்கையை மாற்றி ரஷ்யாவிற்கு நமது தளவாட பொருட்களை விற்க வேண்டும்.

அதன் மூலம் நமது ஏற்றுமதி, இறக்குமதி வித்தியாசத்தை குறைக்க முடியும். ரஷ்யாவிடம் நமக்கு இப்போது இருக்கும் Trade Deficit $35 Billion, அது கிட்டத்தட்ட 100 பில்லியன் அளவிற்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்து, பின்பு வித்தியாசம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பு குறைந்து அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி ரஷ்யாவிற்கு இணையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷ்யாவிடம் பல இயற்கை வளங்கள் இருக்கிறது. அதை செய்ய நிறுவனங்கள் இல்லை, தொழில் நுட்பம் தெரிந்த வேலைக்காரர்கள் இல்லை. அது இந்தியாவுடம் இருக்கிறது. அதனால் இந்திய நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தொழில் தொடங்க முன்வருகிறது. அதற்காக ரஷ்யாவில், விலாடிவாஸ்டாக் எனும் துறைமுகம் உள்ளது. அங்கே இந்தியா ஒரு புதிய நகரத்தை, தொழில்சாலைகளை கட்டப்போகிறது. ஆம் சாகர்மாலா போல.

சென்னை- விலாடிவாஸ்டாக் கடல் வழியை சில வருடங்களுக்கு முன்பு மோடி அரசு தொடங்கி வைத்தது ஞாபகம் வருகிறதா? அதன் மூலம் நம் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளரும். அது மட்டுமல்ல, பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கூடும். எனவே நீங்கள் ஒரு துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், ரஷ்யா கொடுத்துள்ள 90 பொருட்களை உற்பத்தி செய்யும் துறைகளில் முதலீடு செய்தால் பெரிய உயர்வை எட்டலாம். அந்த 90 பொருட்களில் காப்பரும் ஒன்று. ஆனால் சீனா நம் ஸ்டெர்லைட ஆலையை மூடவைத்து, அதிக டிமாண்ட் கிரியேட் செய்து அது லாபம் பார்க்கிறது.

எனவே இந்தியாவின் வளர்ச்சியை ஒரு பக்கம் எல்லா துறைகளிலும் ஊக்கப்படுத்தும் முயற்சியில் மோடி அரசு மும்மரமாக இறங்க, மறுபக்க. சீனாவும், மேலை நாடுகளும் அப்படி தொழில் தொடங்காமல் இருக்க எல்லா குழிபறிக்கும் வேலைகளை செய்கின்றன.

அதற்கு இரண்டாவது மாற்றுவழி என்ன? இந்தியாவின் ரூபாயை வேறு நாடுகளும் ஏற்க வேண்டும். அதாவது ரஷ்யாவிடம் உள்ள ரூபாயை கொண்டு பிரேசிலில் ஒரு பொருள் வாங்க முடியும் என்றால், ரஷ்யா ரூபாயை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை இருக்க முடியும். ஆம் நம்முடைய ரூபாயை டாலர் போல உலக அளவில் ஏற்கும் நிலை வரும் போது, அந்த பிரச்னை குறையும். அதற்கான தேவையான கட்டமைப்புகளையும், Digital Currency போன்ற எளிதான வழிகளையும் இந்தியா முன்னெடுக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. எனவே முதல் வழிதான் இலகுவானது, எளிதில் சாத்தியமானது.

அதற்கான பல கட்டமைப்புகளை இந்தியா முன்னெடுக்கிறது. அதில் சாகர்மாலா என்றதொரு திட்டம், துறைமுகங்களை மையப்படுத்தி தொழில் செய்வது. உதாரணமாக இந்தோனேஷியாவில் இருந்து மரங்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து. அதை சுற்றி ஒரு தொழில் பூங்கா அமைத்து, அங்கேயே அதை Furniture களாக மாற்றி, அங்கிருந்தே வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வது. அதனால் போக்குவரத்து நேரம், செலவு, இறக்குமதி வரியும் செலுத்த வேண்டியதில்லை, ஏற்றுமதிக்கும் வரி செலுத்த வேண்டியது இல்லை.

அதனால் விரைவாக வேலை செய்து உற்பத்தியை பெருக்க முடியும். அது போன்ற வேலை செய்பவர்கள் எல்லாம் அங்கேயே குடியேறுவார்கள். அதாவது திருப்பூரில் பின்னலாடை தொழில் இருப்பது போல, அந்த தொழில் பூங்காவில் Furniture Production அதிக அளவில் செய்வதால், Specialization ஏற்பட்டு, தொழிலும் நுட்பமும் வேகமாக முன்னேறும். இதுதான் சாகர்மாலா, இப்போது அந்த திட்டத்தை ஏன் கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கிறார்கள் என்று புரிகிறதா?

இதன் மூலம் இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிக அதிகளவில் உயரும். ஆனால் நம்மிடம் அதற்கான Carpentar வேலை செய்ய ஆட்கள் இல்லாதபோது, நாம் பீஹார், உபியில் இருந்து வரவழைக்கிறோம். உபியில் பெருமளவில் தொழிற்சாலைகள் வருவதால், அந்த தொழிலாளர்கள் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருவார்கள். அதை அடுத்த 10 ஆண்டுகளில் உணர்வீர்கள். அதன் மூலம் நமது அண்டை நாடுகளுடன் உறவு நன்கு பெருகும். பாகிஸ்தான் உடைந்து சிறு நாடுகளாக மாறும்போது, அவையும் நம் நட்பு வளையத்திற்கு மாறும்.

இந்தியா, சீனாவிற்கு மாற்றாக, அதைவிட தரம் உயர்ந்த பொருட்கள் உற்பத்தியை வரும் காலத்தில் உயர்த்த வேண்டும். அதற்கேற்ப நமது பள்ளி பாடத்திட்டங்கள் மாறவேண்டும். அதற்காக புதிய கல்விக்கொள்கையை ஏற்படுத்தி, அதன் மூலம் நமது மனித வளத்தை பெருக்க மத்திய அரசு நினைக்கிறது. எல்லாம் ஏதோ தனித்தனியான விஷயம் என்றா பார்க்கிறீர்கள், எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை.

ரஷ்யாவின் முக்கிய இறக்குமதிகள் machinery, electrical machinery, vehicles, pharmaceuticals, plastics, optical, articles of iron or steel, iron and steel, edible fruits & nuts and rubber. பிரதமர் மோடி சமீபத்தில் கேரளா வந்த போது 9 ஆர்ச் பிஷப்கள் ரப்பர் விலை உயர்த்த சொல்லி கேட்டார்கள், அதற்கு உதவுவதாக சொல்லி இருக்கிறார். மற்ற துறைகளில் வேகமாக உற்பத்தியை ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப பெருக்குகிறோம்.

ரஷ்யா, இந்திய வர்த்தகம் என்பது மட்டுமல்ல, வருங்காலத்தில் இந்தியாவில் Boeing முதல், Rolls Royce வரை தங்கள் நிறுவனங்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும். பின்பு அதே நிலை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் ஜாகுவார் கம்பெனியை டாடா வாங்கியபின், அதன் தொழில் நுட்பங்களை உயர்த்தி டாடா கார்களின் தரம் எப்படி உயர்ந்தது. அது போல பல பெரிய நிறுவனங்களை, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து வாங்கும்.

அதற்கான யுக்திகளை செய்யாமல் இருக்க அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் முன்னெடுக்கிறது? அதை செய்து முடிக்கும்போது பல பொருட்களை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வார்கள். அதனால் இந்தியாவின் ரூபாயின் தேவை உலகளவில் அதிகரிக்கும்போது, இரண்டாவது வழியான ரூபாய் வழியாக ரஷ்யா மட்டுமல்ல உலக நாடுகள் வாங்கும்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? மோடியின் பின்னால் நிற்பது மட்டுமல்ல, நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து உயர்த்தவும், மேற்கத்திய, மற்றும் சீன அடிமைகளை வேரறுக்கவும் வேண்டும். அதை மக்களாகிய நாம் முன்னெடுத்து செய்தால் மிகப்பெரிய மாற்றத்தை உலகளவில் இன்னும் 10 ஆண்டுகளிலேயே செய்து முடிக்கலாம்.

Updated On: 13 May 2023 8:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  3. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  4. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  5. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  7. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  8. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  10. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்