/* */

உச்சம் தொட்ட மனிதநேயம்; மனம் நெகிழ்ந்த செவிலியர்

தேனி எஸ்.பி.ஐ., வங்கியின் மனிதநேய சேவையினை கண்டு, தேனி மருத்துவக் கல்லுாரி செவிலியர் மனம் நெகிழ்ந்தார்.

HIGHLIGHTS

உச்சம் தொட்ட மனிதநேயம்; மனம் நெகிழ்ந்த செவிலியர்
X

தேனி எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜனிடம் நன்றி தெரிவித்த, செவிலியர் காளியம்மாள்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் செவிலியராக பணியாற்றுபவர் காளியம்மாள், 30. இவரது கணவர் செல்வராஜ் ஆண்டிபட்டியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். செல்வராஜ் டூ வீலரில் ஹெல்மெட் அணிந்து, பணிக்கு சென்றார். திடீரென டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. செல்வராஜ் ஹெல்மெட் அணிந்திருந்தும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் செல்வராஜை, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வராஜூக்கு தலைக்காயம் பலமாக உள்ளதால், உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் அதற்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் டாக்டர்கள் கூறினர். திடீரென இவ்வளவு பணம் நடுத்தர குடும்பத்தினரால் தயார் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், காளியம்மாள் மதுரையில் இருந்து கொண்டே, தேனி எஸ்.பி.ஐ., வங்கியின் உதவியை நாடினார். வங்கி கடன் ஆலோசனை முகவர் பாண்டியராஜ் மூலம் முதன்மை மேலாளர் ரெங்கராஜனை தொடர்பு கொண்டு தன் கணவரின் நிலையையும், தனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான திடீர் மருத்துவச் செலவுகளையும் பற்றிக் கூறினார்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட முதன்மை மேலாளர் காளியம்மாளின் ஆவணங்களை வாட்சப் மூலம் வாங்கி, நகல் எடுத்து, கடன் வழங்கும் அலுவலர் சரத்திடம் நிலையை விளக்கி கூறி, உடனடியாக கடன் வழங்க அறிவுறுத்தினார்.

கடன் வழங்கும் அலுவலர் சரத் மற்றும் வங்கி பணியாளர்கள் அத்தனை பேரும் தீவிரமாக வேலை செய்து, 20 நிமிடங்களில் காளியம்மாளுக்கு 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க ஏற்பாடு செய்தனர். கடன் அனுமதி அளித்த நிலையில், காளியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளியம்மாள், தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் கொடுத்த ஆவணங்களில் கையெழுத்திட்டு கடனை பெற்றுக் கொண்டார். அப்போது இரவு 9 மணி. காளியம்மாளுக்கு கடன் வழங்க தங்களது பணி நேரம் முடிந்த பின்னரும் தேனி எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்கள் இரவு 9 மணி வரை காத்திருந்தனர். கடன் தொகையை பெற்ற காளியம்மாள் உடனே அந்த பணத்தை பெற்று, மருத்துவமனையில் செலுத்தி, தனது கணவரின் ஆபரேசனை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

நேற்று (ஜனவரி 31ம் தேதி) தேனி வங்கி கிளைக்கு வந்த காளியம்மாள் முதன்மை மேலாளரை சந்தித்து, தற்போது தனது கணவர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக கூறி, அதற்கு உதவியாக இருந்த வங்கி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

காளியம்மாள் கூறியதாவது: பொதுவாக அரசு வங்கிகளில் சேவைக்குறைபாடு உள்ளது என்ற புகார் இருந்து வருகிறது. அதுவும் எஸ்.பி.ஐ., வங்கியில் சேவைக்குறைபாடு பிரச்னை அதிகம் இருப்பதாக மக்கள் மத்தியில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனக்கு வங்கி அலுவலர்கள் இரவு 9 மணி வரை காத்திருந்து கடன் சேவை செய்தது, மிகப்பெரிய விஷயம். இதன் மூலம் சேவைக்குறைபாடு எதுவும் இல்லை என்பதை மிகவும் தெளிவாக நிரூபித்துள்ளனர்.

வங்கி அலுவலர்கள் கேட்ட ஆவணங்களை கொடுத்தால், சில நிமிடங்களில் கூட கடன் வழங்க முடியும் என எஸ்.பி.ஐ., வங்கி நிரூபித்துள்ளது. எஸ்.பி.ஐ., வங்கியின் இந்த இந்த சேவை மூலம் உரிய நேரத்தில் என் கணவருக்கு சிகிச்சை அளித்து, அவரை நன்கு குணப்படுத்த முடிந்தது. இதனை நான் பலரிடம் சொல்லி உள்ளேன். கடன் வாங்கி சென்ற நான் என் கணவர் முழுமையாக குணமடைந்த பின்னர் நன்றி கூறவே வங்கிக்கு வந்தேன்.

இவ்வாறு கூறினார்.

Updated On: 1 Feb 2023 2:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?