/* */

மூலவைகையில் கொட்டிய மழை: வைகை ஆற்றில் நீர் வரத்து

மேகமலையின் மூல வைகை மலைப்பகுதியில் கொட்டிய மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மூலவைகையில் கொட்டிய மழை: வைகை ஆற்றில் நீர் வரத்து
X

வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகையில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டது.

தேனி மாவட்டம், மூல வைகையில் நேற்று மாலை 2.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 5.30 மணி வரை பெய்தது. மழை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே மிகவும் பலத்த மழையாக மாறியது. மழையின்றி காய்ந்த கிடந்த நிலங்கள் குளிர்ந்தன. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு வெளுத்துக் கட்டியது மழை. மீதம் ஒரு மணி நேரம் சாரல் மட்டும் பெய்தது. இப்பகுதியில் மழைமாணி அமைக்கப்படாததால், எவ்வளவு மி.மீ., மழை பெய்தது என்ற விவரம் அறிய முடியவில்லை. ஆனால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவு மழை பெய்தது.

வனத்தை விட்டு வெளியேற, வெளியேற மழையின் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஆண்டிபட்டியில் 36 மி.மீ., வைகை அணையில் 21 மி.மீ., மழை பதிவானது. ஆண்டிபட்டியில் 36 மி.மீ., என்றால், மூல வைகையில் குறைந்தபட்சம் 75 மி.மீ., மழையாவது பதிவாகி இருக்கும் என விவசாயிகள் கணித்துள்ளனர்.

மூல வைகை ஆற்றில் வெள்ளம் வந்தாலும், வைகை ஆற்றின் தொடர்ச்சி மணல்பாங்கான நிலத்தில் அமைந்திருப்பதால் அதிகளவு நீரை நிலம் உறிஞ்சி விட்டது. இதனால் வெள்ளத்தின் வீரியம் வரவர குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக கண்டமனுார், கணேசபுரத்தில் கொட்டித்தீர்த்த மழை, அங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் சிறிய துாறலுடன் நின்று விட்டது. ஆக பரவலாக மழை பெய்யாமல், சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மழை பெய்தது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 28 May 2023 4:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?