/* */

பொங்கல் போனஸ் அறிவிப்பில் திருப்தி இல்லை.. அரசு ஊழியர்கள் நாளை திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்…

பொங்கல் போனஸ் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பொங்கல் போனஸ் அறிவிப்பில் திருப்தி இல்லை.. அரசு ஊழியர்கள் நாளை திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்…
X

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமிநாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ. 7000 அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 01.07.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவித அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக 01.07.2022 முதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (டிசம்பர் 29) அனைத்து அரசு அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அற்கான தயாரிப்பு பணிகளும், பிரச்சாரமும், முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் பொங்கல் போனஸ் அறிவிப்பினை முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட போனஸ் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 7000 போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு உழியர்களுக்கு ரூபாய் 7000 போனஸ் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பினை வெளியிடுவதோடு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று மாநில அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 7000 போனஸ் ஆக வழங்காமல், இந்த ஆண்டும் போனஸாக ரூ 3000 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

1985 ஆம் ஆண்டு முதல் A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பில் பணப்பலன் வழங்கப்பட்டு வந்ததது. கடந்த இரண்டு ஆண்டுகளாக A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பில் பணப்பலன் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டும் அதே நிலைபாட்டினை தமிழக அரசு கடைபிடித்து A மற்றும் B பிரிவு ஊழியர்களை வஞ்சித்துள்ள போக்கு ஏற்புடையதல்ல என்பதுடன், தமிழக அரசின் இத்தகைய நிலைபாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பிலான வண்மையாக கண்டணங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசுத் துறைகளில் உரிய காலங்களில் முறையான பணி நியமனம் இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கான பணியிடங்கள், தற்சமயம் காலியாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் பணி நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பதவி உயர்வு பெற்று A மற்றும் B பிரிவு ஊழியர்களாவே , தற்சமயம் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறனர்.

காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் C மற்றும் D பிரிவு பணியிடங்கள் என்பதால் தமிழக அரசுக்கு போனஸ் அறிவிப்பின் மூலம் 221 கோடியே 42 லட்ச ரூபாய் கூடுதல் செலவு என்பதே மிகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள தொகை என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை கடந்த 01.07.2022 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், தொடர் போராட்டங்களை நடத்தியும் வருகிறோம். இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.

தமிழக அரசின், தற்போதய பொங்கல் போனஸ் அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தெரிவிப்பதுடன் பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள தமிழக அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனங்களையும், தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இதற்கான அரசாணை வெளியிடுவதற்கு முன்னதாக தனது நிலைபாடு குறித்து சரியான பரிசீலனை மேற்கொள்வதோடு தனது நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்யப்பட்ட போனஸ் சட்டத்தின்படி தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 7000 போனஸ் வழங்க வேண்டும்.

A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கும் பணப்பலன் கிடைக்கும் வண்ணம் அறிவிப்பினை வெளியிட வேண்டும். புற ஆதார பணி நியமணம் பெற்றுள்ள ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து பகுதி அரசு ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிப்பின் வாயிலாக உரிய பணப்பலன் வழங்கிடும் அறிவிப்பு வெளியிட வேண்டும்...என தமிழக அரசை, வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோன்று சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட ரூ 1000 போனஸ் என்பதையும் உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதே போன்று 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்குவது குறித்த அறிவிப்பினையும் உடனடியாக வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ் மற்றும் உரிய காலங்களில் அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஏற்கெனவே திட்டமிட்ட அடிப்படையில் நாளை (டிசம்பர் 29) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Dec 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்