/* */

தேனியில் பேய் வீடுகள்... குடியேற விரும்புபவர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

Today Theni News -தேனியில் பேய் வீடுகளில் குடியேற விரும்புபவர்களுக்கு சலுகைகள் அறிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

தேனியில் பேய் வீடுகள்...  குடியேற விரும்புபவர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
X

தேனி நகர் பகுதிகளில் பேய் வீடு பற்றி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

Today Theni News - தேனியில் பேய் வீடுகளில் குடியேற பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் என கவுமாரியம்மன் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஜெய்முருகேஷ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தேனியில் வாடகை வீடுகளில் குடியிருப்போரில் வெகு சொற்ப அளவில் சிலர் குடும்ப பிரச்னைகளால் தீ வைத்தோ, துாக்குமாட்டியோ தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் விபத்தில் சிக்கி இறந்து விடுகின்றனர். அதன் பின்னர் குடியிருப்பவர்கள் வேறு வீடு மாறி விடுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் அதாவது இயற்கைக்கு முரணனான சம்பவம் நடந்த வீடுகளை பேய் வீடுகள் என கருதி குடியிருக்க யாரும் வருவதில்லை.

ஆனால் இந்துக்களில் தைரியம் மிகுந்த சிலர், நாங்கள் பேயை பார்க்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர். அதேபோல் கிறிஸ்தவர்களும், முஸ்லீம் மக்களும் பேய் குறித்து அச்சப்படுவது இல்லை. இதனால் இவர்களை தேடிப்பிடித்து அந்த வீடுகளில் குடிவைக்க வேண்டி உள்ளது. அப்படி குடிவைத்த சிலமாதங்களில் அந்த வீடுகளுக்கு பேய் வீடுகள் என குத்தப்பட்ட முத்திரை மாறி விடுகிறது.

எனவே பேய் வீடுகள் என கருதப்படும் வீடுகளி்ல் குடியேறுபவர்களுக்கு நாங்கள் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எதுவும் வாங்குவதில்லை. இலவச சேவையாகவே இதனை செய்து வருகிறேன். இதனால் பேய் வீடுகளில் குடியிருக்க வருபவர்களுக்கு இலவச சேவை என விளம்பர போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டினேன். பலரும் என்னை அணுகி பல வீடுகளில் குடியிருக்க தொடங்கி விட்டனர். இதன் மூலம் பல வீடுகளின் முத்திரைகளை மாற்றி விட்டேன்.

இவ்வாறு கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...