/* */

கேரளாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைவது கண்டு பிடிப்பு

LPG Cylinder Rate - தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்தது போல் கேரளாவில் கியாஸ் சிலிண்டர் எடை குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்  எடை குறைவது கண்டு பிடிப்பு
X

LPG Cylinder Rate - தமிழகத்தில் பால் பாக்கெட்டுகள் எடை குறைவாக விநியோகிக்கப்படுவது குறித்து பா.ஜ., புகார் எழுப்பியது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதேபோல் கேரளாவில் சிலிண்டர் எடை குறைவாக விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு சிலிண்டரும் 15 கிலோ 800 கிராம் எடையுடன் இருக்கும். அதில் 14 கிலோ 200 கிராம் எடையில் கியாஸ் நிரப்பப்பட்டிருக்கும். ஆக சிலிண்டர் எடை மொத்தம் 30 கிலோ இருக்கும். யாரும் சிலிண்டரை எடை போட்டு பார்த்து வாங்குவதில்லை. ஆனால் ஒவ்வொரு சிலிண்டரும் எடை மிஷினில் எடை போட்டு பார்த்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது.

கேரளாவில் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களை எடை போட்டு பார்த்த போது ஒவ்வொரு சிலிண்டரிலும் 700 கிராம் வரை எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

நமது ஊரிலும் சமுக ஆர்வலர்கள் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது. இந்த மாதம் ₹1074/ கமிசன் ₹26/ ஆக மொத்தம் ₹1100 /வாங்குகிறார்கள். இவ்வளவு பணம் கொடுத்தும், எடை குறைந்தால் பெரும் சிக்கல் உருவாகும்.

ஒரு சிலிண்டருக்கு 700 கிராம் எடை குறைகிறது என்பது கேரளாவின் செய்தி என நினைக்காமல், நமது ஊரில் எடை போட்டு பார்த்தால் தான் தெரியும். சமுக ஆர்வலர்கள் உடனே கவனம் செலுத்தவும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 6:36 AM GMT

Related News