/* */

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை: அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

‘நாட்டு நலனுக்கு ஏற்ற வகையில், உலக நாடுகளுடன் நட்பு கொள்வோம் அணிசேராக் கொள்கை முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார்

HIGHLIGHTS

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை:  அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
X

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் .

அமெரிக்காவில் பெரும் வாதங்களையும் பத்திரிகை சந்திப்புக்களையும் நடத்திவிட்டு கம்பீரமாக நாடு திரும்புகின்றார் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். அவரின் சந்திப்பும் பேட்டியும் பெரும் கவனத்தை பெற்றிருக்கின்றன. ஒருவகையில் இது இந்தியாவுக்கு வெற்றி. பல உரசல்களுக்கு உலகறிய விளக்கம் கொடுத்து விட்டு திரும்புகின்றார்

அமெரிக்காவின் முதல் முனகல் இந்தியா ரஷ்யா உறவு பற்றியது. அதற்கு சரியான விளக்கத்தையும் சோவியத்துக்கும் இந்தியாவுக்குமான தொடர்பையும் பற்றி சொல்லிய ஜெய்சங்கர், இந்தியாவின் இன்றைய மாற்றத்தையும் தெளிவாக சொன்னார்.

முன்பு 100 சதவீதமாக இருந்த ரஷ்ய ஆயுத இறக்குமதி இப்பொழுது பாதியாக குறைந்துவிட்டது. பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் என எது இந்தியாவுக்கு தேவையான ஆயுதமோ அதை வாங்குகின்றோம். கச்சா எண்ணெய் கூட ரஷ்யா குறைந்த விலையில் தருவதால் வாங்குகின்றோம். அதைவிட குறைவான விலையில் அமெரிக்கா தரும் இடத்தை கைகாட்டினால் ரஷ்யாவினை விட்டு அதை நாங்கள் வாங்க தயார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எப் 16 விமானங்களை மேம்படுத்தி கொடுக்கின்றது. இதை ஏன் என்று கேட்டால் அது தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் கூட்டாளி என்கின்றீர்கள். பாகிஸ்தான் எந்த தீவிரவாதி மேல் அந்த விமானம் கொண்டு தாக்குதல் நடத்தியது சொல்லுங்கள்?

இத்தனை ஆண்டுகாலம் பாகிஸ்தான் அந்த விமானம் கொண்டு யாரை தாக்கியது? பாகிஸ்தானில் என்ன நடக்கின்றது என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.2019ம் ஆண்டு இந்தியா தன் எல்லை கடந்து தீவிரவாதிகளை தாக்கிய பொழுது அந்த தீவிரவாதிகளை பாதுகாக்க பாக்கிஸ்தான் இந்த எப் 16 விமானங்களை பயன்படுத்தியதை மறந்து விட்டீர்களா. எப் 16 மூலம் பாகிஸ்தான், இந்திய விமானத்தை தாக்கியது தான் தீவிரவாதத்துக்கு எதிரான போரா?

இந்தியா எப்பொழுதும் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுகிறது. இந்தியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்த காலமும் இருந்தது. இப்பொழுது அப்படி அல்ல. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவு நீடிக்கின்றது. நாங்கள் முந்தைய அரசு போல் இல்லாமல் நாட்டு நலனுக்கு எது முக்கியமோ அதற்கே முன்னுரிமை கொடுப்போம், அப்படித்தான் அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளுடனும் நல்லுறவு கொண்டிருக்கின்றோம்

ஆசியாவில் இந்தியா தவிர்க்கமுடியா நாடு என்பதை நீங்களே உணர்ந்திருக்கின்றீர்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றி உலகத்தில் அமைதி சாத்தியமில்லை குறிப்பாக கிழக்காசியாவில் அமைதி நிலைக்காது என்பதை தெரிந்திருக்கின்றீர்கள் அனாலும் இந்தியாவினை சீண்டுகின்றீர்கள்.

அணிசேரா கொள்கையினை நாங்கள் கைவிட்டு நாட்டு நலனுக்கு முன் நிற்பதை ஏன் சொல்ல மறுக்கின்றீர்கள்? காஷ்மீரில் இப்பொழுது இந்திய கொடி கம்பீரமாக பறக்கின்றது. நாடெல்லாம் அமைதியும் கட்டுப்பாடும் நிலவுகின்றது. ஆனாலும் அமெரிக்க ஊடகங்கள் சில தவறான நபர்களுக்காக அவர்கள் பாணியில் செய்தி வெளியிடுவது நல்லதல்ல, உண்மையினை எழுத வேண்டும்.நாங்கள் எக்காலமும் எல்லா விஷயங்களிலும் இந்திய நலன் ஒன்றையே விரும்புகின்றோம். அதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என நெடிய விளக்கத்தை அளித்தார்.

அதாவது முன்பு போல இந்தியா ரஷ்யாவுக்கான முழு கூட்டாளி அல்ல. சீனா, ஈரான் போல 100 சதவீத ரஷ்ய சார்பும் அல்ல. இது இந்நாட்டுக்கு எது தேவையோ அவ்வகையில் நாம் நட்பை பேணுவோம். அவ்வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுடனும் நல்லுறவில் இருக்கின்றோம், காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை போல, ஒருதலைபட்சமான ரஷ்ய ஆதரவை நாங்கள் செய்யவில்லை என திட்டவட்டமாக இந்தியாவின் கொள்கையினை எடுத்துரைத்தார்.

ஜெய்சங்கரின் வாதம் அமெரிக்க மேலிடத்தில் பெரும் சலசலப்பை எற்படுத்தியிருக்கிறது. எனினும் அந்த எப் 16 விமானம் சீனா கைக்கு செல்லாமலும், ஆப்கனில் அடிக்கடி தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் வான்வெளி அவசியம் எனும் நிலையிலும், அமெரிக்கா சில சமாளிப்பு முயற்சிகளை செய்கின்றது. முக்கியமாக இந்தியாவை சமாளிக்க முயற்சிக்கிறது.

இந்தியா அச்சப்படும்படி நாங்கள் புதிய விமானமோ, புதிய தொழில் நுட்பமோ அதிநவீன கருவிகளோ பாகிஸ்தானுக்கு வழங்கவில்லை. மாறாக பழைய விமானங்களை பழைய ஒப்பந்தபடி மேம்படுத்துகின்றோம். எங்களுக்கு அதை மேம்படுத்தும் கடமை உள்ளது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இப்படி உலக அரங்கில் புதிய இந்திய கொள்கையினை அறிவித்து விட்டு கம்பீரமாக நாடு திரும்புகின்றார் ஜெய்சங்கர். ஆம், இந்தியா யாருக்கும் முழு நண்பனுமல்ல எதிரியுமல்ல. இந்நாட்டுக்கு எது நல்லதோ அதன்படி நகர்வுகளை மேற்கொள்ளும் நிலைப்பாட்டை கொண்டது என உலகுக்கு சொல்லியிருக்கின்றது மோடியின் அரசாங்கம்.

Updated On: 30 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!