/* */

அண்ணாமலையின் போராட்டத்திற்கு தேனி இந்து எழுச்சி முன்னணி ஆதரவு

அண்ணாமலை நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு தேனி இந்து எழுச்சி முன்னணி ஆதரவு அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அண்ணாமலையின் போராட்டத்திற்கு   தேனி இந்து எழுச்சி முன்னணி ஆதரவு
X

தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தும் போராட்டங்களுக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி ஆதரவு தெரிவித்து உள்ளது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தேனி நகர செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் வழி நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்த ஆண்டு தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இரண்டாம் ஆண்டாக நமது இந்து எழுச்சி முன்னணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் நடத்தப்பட்டது. இந்த அன்னதானத்திற்கு இடம், பொருள், பண உதவிகள் மற்றும் உடல் உழைப்பு வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் இயக்கம் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கும் விழா சிறப்பாக நடைபெற செயலாற்றிய தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு நல்கிய பொது மக்களுக்கும் பெரியோர்களுக்கும் இந்து எழுச்சி முன்னணி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தூய அரசியலை முன்னெடுத்து, புனிதமான அரசியலை கலங்கப்படுத்தியவர்களும் அந்த அரசியலின் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்த ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்த நெஞ்சுரம் மிக்க முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான அண்ணாமலைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் இந்த புனிதமான முன்னெடுப்புக்கு இந்து எழுச்சி முன்னணி பேரியக்கம் என்றும் பக்கபலமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Updated On: 17 April 2023 7:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு