/* */

2023ம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என ஆய்வில் தகவல்

2023 ம்ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊதிய உயர்வு இந்தியாவில்தான் இருக்கும் என்று ஆய்வு சொல்கிறது.

HIGHLIGHTS

2023ம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கு   அதிக சம்பளம் கிடைக்கும் என ஆய்வில் தகவல்
X

கோப்பு படம்.

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை உருவாகி வருகிறது. அமெரிக்கா ஏற்படுத்தும் குழப்பம் தான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் செயல்களை தாண்டி இந்திய பொருளாதாரம் மட்டும் திடமாக வளர்ந்து வருகிறது. சீனாவே தடுமாறி நிற்கிறது. ரஷ்யா கவிழ்ந்து விட்டது. பிரிட்டன் வீழ்ந்து விட்டது. பணக்கார ஐரோப்பிய நாடுகள் அத்தனையும் அலறுகின்றன. அரபு நாடுகள் கூட கலங்கித்தான் நிற்கின்றன. ஆசிய நாடுகளும் பெரும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிகவும் நன்றாகவே உள்ளது. உலகம் முழுவதும் பொருளதார வீழ்ச்சியில் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக அளவில் ஒரு ஆய்வு நடந்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளை தான் நாம் இந்த செய்தியில் காணப்போகிறோம்.

2023ம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில் தான் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 4.6 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று வேலைத்திறன் நிறுவனமான இசிஏ இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான ஊதிய உயர்வு குறித்து டாப் 10 நாடுகளில் இந்த ஆய்வு நடந்தது. இதில் ஆசியாவில் உள்ள 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆய்வில் 2022ம் ஆண்டில் உலகம் முழுவதும் சராசரியாக 3.8 சதவீதம் ஊதியம் குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

மொத்தம் உலகளவில் 68 நாடுகளில் உள்ள நகரங்களில் செயல்படும் 360 பன்னாட்டு நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், புள்ளி விவரங்கள் அடிப்படையில் இசிஏ இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா மற்றும் வியட்நாமில் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு 2023ம் ஆண்டில் இருக்கும். சீனாவில் 3.8 சதவீதமும், பிரேசிலில் 3.4 சதவீதமும் ஊதிய உயர்வு இருக்கும். சவுதி அரேபியாவில் 2.3 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும்

பாகிஸ்தானில் மைனஸ் 9.9 சதவீதம் ஊதியக் குறைவு ஏற்படும். அதைத் தொடர்ந்து கானா(-11.9%), துருக்கி(-14.4), இலங்கை(-20.50%)ஊதியக் குறைவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் உண்மையான ஊதிய உயர்வு என்பது 37 சதவீத நாடுகளில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய உயர்வு பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக பணவீக்கமும் இருக்கிறது. இதில் பணவீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது ஐரோப்பிய மண்டலம் தான்.

கடந்த 2000ம் ஆண்டுக்குப்பின் மிகமோசமாக பாதிக்கப்படுவது பிரிட்டனில் உள்ள ஊழியர்கள் தான். 3.5 சதவீதம் ஊதியம் உயர்வு இருந்தாலும், பணவீக்கத்தின் அடிப்படையில் ஒப்பிடும்போது, 5.6 சதவீதம் குறைவாகும். அதாவது 9.1 சதவீதம் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இது மிகக்குறைவாக இருக்கும். அமெரிக்காவில் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் உண்மையான ஊதி உயர்வு 4.5 சதவீதம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Oct 2022 5:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...