'இயர்போன்' பயன்படுத்துவதால் அதிகரிக்கும் பாதிப்புகள்.. காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்..

அதிகநேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காதுகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இயர்போன் பயன்படுத்துவதால் அதிகரிக்கும் பாதிப்புகள்.. காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்..
X

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றினர். ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக 'இயர்போன்' பயன்படுத்தினர்.

இதன்காரணமாக காதுகளில் பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அப்போது நிபுணர்கள் கூறினர். அதன் பின்னர் ஆன்லைன் மூலம் பணி என்பது வழக்கமான பணிகளில் ஒன்றாகி விட்டது. இந்த பணிகள் இப்போது நாடு முழுவதும் புதிய வழக்கங்களை உருவாக்கி வருகிறது. ஏராளமான நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடி ஒர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் ஆன்லைன் மூலம் பணி செய்வதை உறுதிப்படுத்தி வருகின்றன.

இதனால் நாளுக்கு நாள் பிரச்னைகளில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர்கள் கூறியதாவது:

அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் 'இயர்போன்' பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. தினந்தோறும் காதுகளில் பிரச்சினையுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு மேல் 'இயர்போன்' அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் 'இயர்போன்' பயன்படுத்துவது காதுகளுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது.

சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ்களை பயன்படுத்தும் போது அது காதில் நோய் தொற்றை ஏற்படுத்தும். மேலும் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் 'இயர்போன்' பயன்படுத்துவது கேட்கும் திறனை குறைக்கும். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றனர்.

தடுக்க என்ன செய்யலாம்?

மேலும், காதுகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறியதாவது:

தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டு 'இயர்போன்'களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் 'இயர்போன்' பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை நேரடியாக பாதிக்கிறது.

இதேபோல் சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்க கூடாது. இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம். அதேபோல் காது பாதிப்புகள் ஏற்பட்டால் பலருக்கு சுய வைத்தியம் பார்க்கும் வழக்கமும் உள்ளது. அப்படிப்பட்ட சுய வைத்தியம் நிரந்தரமாக காது கேட்கும் திறனை பாதித்து விடும்.

எனவே காது பாதிப்பு பற்றி தெரிந்தாலே உடனே காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். தற்போது ஆரம்ப கட்ட பாதிப்புகளை கண்டறிந்து முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் உபரகணங்கள் பயன்பாட்டில் வந்து விட்டன. எனவே பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2022 4:23 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...