/* */

3 முறை முதல்வர் பதவி வகித்தாலும் தலைமையிடம் கட்சியை பத்திரமாக ஒப்படைத்தவர் ஓபிஎஸ்

Despite being the Chief Minister for 3 terms it was OPS who handed over the party to the leadership

HIGHLIGHTS

3 முறை முதல்வர் பதவி வகித்தாலும் தலைமையிடம் கட்சியை பத்திரமாக ஒப்படைத்தவர் ஓபிஎஸ்
X

தேனியில் ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே எதிர்பார்த்தபடியே (திட்டமிட்டபடி) மீண்டும் தொடங்கியுள்ள யுத்தம் . சென்னை முதல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.

மூன்று முறை முதல்வர் பதவி வகித்தும், ஆட்சியையும், கட்சியையும் தலைமையிடம் பத்திரமாக திருப்பி கொடுத்தோம். ஆனால் ஒரே ஒருமுறை முதல்வர் வாய்ப்பு வழங்கியதற்காக கட்சி தலைமையையும் வீழ்த்தி, ஆட்சியையும் முழுமையாக கைப்பற்றி, தேர்தலில் தோல்வியடையச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பகிரங்கமாக குற்றம் சுமத்த தொடங்கி உள்ளனர். மீண்டும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டும். அந்த தலைமை ஓ.பி.எஸ் ஆகத்தான் இருக்க வேண்டும். அப்போது தான் கட்சி வளரும் என அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.

சென்னையில் நடந்த அதிமுக நிர்வாக குழுவில் இந்த ஒற்றைத் தலைமை பிரச்னை திட்டமிட்டுத்தான் எழுப்பப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களும் இந்த பிரச்னை வரும் என எதிர்பார்த்தே நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட இந்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படாமலேயே முடிந்து. ஆகவே, நேற்று இரவே ஓ.பி.எஸ் அணியினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கினர். சென்னை மட்டுமின்றி தேனி மாவட்டம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இன்று விடிந்ததும் இப்படி ஒரு போஸ்டர் யுத்தம் நடக்கும் என்பதை இ.பி.எஸ் அணியினரும் எதிர்பார்த்த ஒன்றுதான். எத்தனை போஸ்டர்களை, எப்படி வடிவமைத்து ஒட்டினாலும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு தான் ஒற்றைத்தலைமை யாரென முடிவு செய்யும். எனவே பொதுக்குழு, செயற்குழுவை கைப்பற்றும் வேலைகளில் நாங்கள் இறங்கி உள்ளோம் என இ.பி.எஸ் அணியினர் தெம்புடன் கூறி வருகின்றனர். இப்போதைக்கு இந்த போஸ்டர் யுத்தத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கியிருந்தாலும், தலைமையை கைப்பற்றுவது யார்? என்பதை பொறுத்திருந்து அமைதியாக பாருங்கள் என இ.பி.எஸ் அணியினர் கூறுகின்றனர். இந்த நிலையில் இப்போதைக்கு இந்த யுத்தம் முடிவுக்கு வராது என்றே தோன்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Updated On: 15 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...