/* */

தேனி மாவட்டத்தில் 96 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பழுதடைந்த 96 வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதென கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 96 வகுப்பறை  கட்டடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்
X

கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த பழைய கட்டடம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள 96 வகுப்பறை கட்டடங்களை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.

கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இப்பணியினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் முரளீதரன் கூறியதாவது: தமிழக முதல்வர் அறிவுரைப்படி, தேனி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த அபாயகரமான வகுப்பறை கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 96 வகுப்பறை கட்டிடங்கள் அபாயகரமானவை என கண்டறியப்பட்டது. இவற்றை இடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த கட்டிடங்கள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டுவிடும். தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையினை பரிசோதிக்க 58 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.

Updated On: 19 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  6. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  7. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை