ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்ப ஓடும் லாரியிலிருந்து குதித்தவர் சாவு

ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்புவதற்காக ஓடும் லாரியில் இருந்து குதித்தவர் எதிரே வந்த பஸ் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்ப ஓடும் லாரியிலிருந்து குதித்தவர் சாவு
X

பைல் படம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னிமங்கலத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், 29. இவர் லாரியை ஓட்டிக் கொண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிபட்டி வனச்சரக அலுவலகம் எதிரே அரசு பஸ் வந்தது. எங்கே பஸ்சும், லாரியும் மோதி விடுமோ என்ற அச்சத்தில் செல்வக்குமார் லாரியில் இருந்து குதித்து விட்டார். அவர் குதித்ததும் லாரி திசைமாறி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ் குதித்த செல்வக்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 4:43 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
 2. திருநெல்வேலி
  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
 3. ஈரோடு
  ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர்...
 4. நாமக்கல்
  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
 5. திருத்தணி
  ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி...
 6. கும்பகோணம்
  கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
 7. திருவள்ளூர்
  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
 8. மன்னார்குடி
  மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி
 9. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது
 10. தொண்டாமுத்தூர்
  கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை