/* */

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து அதில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் என பொதுமக்கள் அச்சம்

HIGHLIGHTS

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்:  தொற்று நோய் பரவும் அபாயம்
X

கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே குடிநீர் சாக்கடைக்குள் செல்லும் குடிநீர் குழாய்க்குள் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் வடக்கு காவல் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் செல்லும் குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாயை கடந்து செல்கிறது. இந்த இடத்தில் குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாய்க்குள் புதைந்து, குழாயும் உடைந்துள்ளது.இதனால் கழிவுநீர், குடிநீர் குழாய்க்குள் புகுந்து விடுகிறது.

இதே போன்று நகராட்சியில் பல இடங்களில் குடிநீர் குழாய்க்குள் கழிவுநீர் செல்கிறது. இதனால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் தரமற்றதாகவும், குடிக்க லாயக்கற்றதாகவும், துர்நாற்றத்துடனும் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீர் குழாய் உடைந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உடைப்புகளை அடைத்து, கழிவுநீர் கலப்பதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 29 Sep 2021 2:45 AM GMT

Related News