Begin typing your search above and press return to search.
தேனியில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதியவர் டூ வீலர் மோதி பலி
தேனியில், நடைபயிற்சிக்கு சென்ற முதியவர், டூ வீலர் மோதி இறந்தார்.
HIGHLIGHTS

தேனி கே.ஆர்.ஆர்., நகர் கிலாரி இல்லத்தில் வசித்தவர் சுப்பாராயலு, 67. இவர் அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டோரம் நடந்து சென்றார்.
அப்போது நடபுதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ், 53 என்பவர் வேகமாக டூ வீலர் ஓட்டி வந்து சுப்பாராயலு மீது மோதினார். பலத்த காயமடைந்த சுப்பாராயலு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.