Begin typing your search above and press return to search.
மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு மரியாதை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர்.
மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ் திரைப்பட நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்படும் தேனீக்கள் அறக்கட்டளை, நஞ்சை அறக்கட்டளை மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டு மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கம்பம் ஈஸ்வரன் கோவில் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், விவேக்கின் கனவான 1கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.