Begin typing your search above and press return to search.
போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை
போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு கூடலுார் போலீசார் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை நடத்தினர்.
HIGHLIGHTS

கூடலுாரில் அராஜகம் செய்து கைதான ரவுடி உதயகுமார்.
தேனி மாவட்டம், கூடலுார் 6வது வார்டை சேர்ந்தவர் உதயகுமார். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர், இன்று மதியம் பணி முடித்து திரும்பும் போது மது அருந்தினார். போதை உச்சிக்கு ஏறியதால், பஜாரில் நின்று கொண்டு வேஷ்டியை வடிவேல் பாணியில் துாக்கி கட்டிக்கொண்டு, அரிவாளை சுழற்றி அராஜகம் செய்தார்.
இதனை கண்ட மக்கள் பதறி அடித்து அங்கிருந்து விலகி ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த கூடலுார் எஸ்.ஐ., அன்பழகன், இந்த காட்சியை கண்டார். உதயகுமாரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் அவர் மீது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தது, பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.