/* */

பணமா? பாசமா? - ஆண்டிபட்டியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மகாராஜனும், அதிமுக சார்பாக அவரது உடன் பிறந்த சகோதரர் ஏ.லோகிராஜனும் போட்டியிடுகிறார்‌.

HIGHLIGHTS

பணமா? பாசமா? - ஆண்டிபட்டியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்
X

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மகாராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக அவரது உடன் பிறந்த சகோதரர் ஏ.லோகிராஜனும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்‌. கடந்த முறை தவற விட்ட வெற்றி வாய்ப்பை இந்த முறை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று தம்பி லோகிராஜனும், பெற்ற வெற்றியை தக்க வைத்திட அண்ணன் மகாராஜனும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மராச நாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் மக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசி வரும் மகாராஜன், இந்த தேர்தலில் பணமா? பசமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். பணம் என்றால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள், பாசம் என்றால் உதயசூரியன் சின்னத்திற்கு (திமுக) ஓட்டு போட்டு, எப்படி கடந்த இடைத்தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்து அழகு பார்த்தீர்களோ அது போல இந்த முறையும் வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கூறி வருகிறார்.

Updated On: 20 March 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி