Begin typing your search above and press return to search.
1229 பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைப்பு: சட்டசபை மனுக்கள் குழு தேனியில் ஆய்வு
தேனி மாவட்டத்தில் வீட்டு வுசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 1229 வீ டுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன
HIGHLIGHTS

வீட்டு வுசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்பிபட்டி கிராமத்தில் பயனாளிகளிடம் சட்டசபை மனுக்கள் குழுவினர் ஒப்படைத்தனர்.
தேனியில் அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்த சட்டசபை மனுக்கள் குழுவினர் 1229 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.
தேனியில் சட்டசபை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழு தலைவர் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கலெக்டர் முரளீதரன், சட்டசபை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்குழுவினர், தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து துறை திட்டங்களை ஆய்வு செய்தனர். பின்னர் 122.18 கோடி ரூபாய் செலவில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ள 1229 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.