கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

சாக்கடைக்கு பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மக்கள் அவதி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு
X

கூடலுாரில் சாக்கடை பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலுார் நகராட்சியில் பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது, குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் வீணாக வெளியேறுவதால் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கம்பம் அருகே கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பட்டாளம்மன்கோயில் தெருவில், சாக்கடை பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் எதிர்பாராத விதமாக சேதமடைந்தால் அதிலிருந்து குடிநீர் வெளியேறி வீணானது. இதனால் இரண்டாவது வார்டு முழுவதும் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பு ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு , குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Oct 2021 5:00 AM GMT

Related News