/* */

தடுப்பூசி சாதனை: ஊராட்சி தலைவரின் வீட்டுக்கு சென்ற சிறப்பித்த கலெக்டர்

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் வீட்டில் நடந்த தேனீர் விருந்தில், தேனி கலெக்டர் முரளீதரன் பங்கேற்று சிறப்பித்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசி சாதனை: ஊராட்சி தலைவரின் வீட்டுக்கு சென்ற சிறப்பித்த கலெக்டர்
X

தடுப்பூசி போடுவதில் சாதனை புரிந்ததற்காக, சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் வெங்கடேசன் வீட்டில்,  கலெக்டர் முரளீதரன் டீ அருந்தினார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சிறப்பாக செய்யும் கிராம ஊராட்சி தலைவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்களது கிராம ஊராட்சியிலேயே விழா நடத்தி பாராட்டுச்சான்று வழங்குவேன். வீடுகளில் நடைபெறும் தேனீர் விருந்தில் பங்கேற்பேன் என கலெக்டர் முரளீதரன் அறிவித்திருந்தார்.

அதுபோலவே, தேனி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 410 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்றன. ஒரே நாளில் மாவட்டத்தில் 63645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் மூலம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி கிராம ஊராட்சி நுாறு சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட கிராமம் என்ற பெருமையினை பெற்றது. இங்குள்ள 6985 பேரில் 18 வயதிற்கு மேற்பட்ட 4502 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, தேனி கலெக்டர் முரளீதரன், திட்ட இயக்குனர் தண்டபாண்டி, கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிமணி கணேசன், துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்டஊராட்சி உறுப்பினர் தமயந்தி, ஊராட்சி கவுன்சிலர் தமிழரசன், சுருளிப்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயந்திமாலா, பி.டி.ஓ.,க்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி ஆகியோர் கொண்ட குழுவினர், சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் நாகமணி வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடந்த தேனீர் விருந்தில் பங்கேற்று, ஊராட்சி தலைவரை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

Updated On: 17 Sep 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி