Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
தேனி மாவட்டம் முழுவதும் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS

தேனி அருகே காமராஜபுரம் கிராமத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
தேனி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளும், சமூக, சங்க அமைப்புகளும் மரக்கன்றுகளை நடவு செய்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை கொண்டாடினர்.
தேனி மாவட்டத்தில் நகர்பகுதி, கிராமப்பகுதி, தனி குடியிருப்பு பகுதி என எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரும் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
பல இடங்களில் மருத்துவ முகாம்கள், அன்னதானங்கள் நடைபெற்றன. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.