வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திருடு போன 2 சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரினை அடுத்து தேனி மாவட்ட எஸ்பி., சாய்சரண் உத்தரவின் பேரில் இரு சக்கர வாகன திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் உத்தமபாளையம் காவல்துறையினர் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சார்ந்த கௌதம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கௌதமை கைது செய்த காவல்துறையினர் இந்த இரு சக்கர வாகன திருட்டில் அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது.இதில் புதுப்பட்டியை சேர்ந்த சரவணகுமார், காக்குவீரன், நந்தகுமார், புகழ் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர். கைது செய்த ஐந்து நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.