மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: வீரர்கள் தேர்வு

தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு, வீரர்கள் தேர்வு இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: வீரர்கள் தேர்வு
X

ஆண் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி உள்ளது. இந்த தமிழக மாற்றுத்திறனாளிகள் அணிக்கு விளையாடுவதற்கான வீரர்கள் தேர்வு இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் எம்.டி.சி.சி ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பாக நடத்தப்பட்ட இந்த வீரர்கள் தேர்வில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் போன்றவை மூலமாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டித் தேர்வின் போது சிறப்பாக விளையாடிய 65 மாற்றுத்திறனாளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் போட்டிகள் நடைபெற உள்ளது. பின்னர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான இண்டாசோன், டோர்னமெண்ட் போட்டியில் விளையாடுவார்கள், தொடர்ந்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஏ.பி.சி என மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த போட்டிகளில் சிறந்து விளங்கும் 25 வீரர்கள் தமிழக அணிக்கு அடுத்த கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து இந்த 25 வீரர்களும் தமிழக அணியின் கேம்ப் மற்றும் ட்ரெய்னிங் க்கு தேர்வு செய்யப்படுவர்கள். அதனை தொடர்ந்து அதில் சிறந்து விளங்கும் வீரர்கள் இறுதியாக தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் கூறியதாவது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகமாக இது போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் தற்போது தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் கிரிக்கெட் அணி சார்பில் விளையாடிய வீரர்கள் அடுத்தகட்டமாக வருகின்ற மார்ச் மாதம் துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால் அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும். தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் பயிற்சிகள் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Updated On: 2021-02-12T20:16:57+05:30

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 2. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 4. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 5. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 6. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 7. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 8. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 9. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு