தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் புதுப்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

தேனி புதுப்பள்ளிவாசலில் இன்று  நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

தேனி மாவட்ட சுகாதாரத்துறையும், தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகமும், சமூக நல்லிணக்க பேரவையும் இணைந்து இன்று புதுப்பள்ளிவாசலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.

காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய முகாம் மாலை ஐந்து மணி வரை நடந்தது. இந்து மக்கள், இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைத்து தரப்பினரும் ஜாதி, மத, பாகுபாடு இன்றி வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஊசி போட வந்த அத்தனை பேரையும் ஜமாத் நிர்வாகிகள் அழைத்து சென்று ஊசி போட வைத்து அங்கேயே சிறிது நேரம் அமர வைத்து, அவர்களுக்கு தேவையான சிறு, சிறு உதவிகள் செய்தும், தேவையானவற்றை கொடுத்தும் உபசரித்தனர். தடுப்பூசி விதிப்படி ஊசி போட்ட பின்னர் குறைந்தபட்சம் அரைமணி நேரம் அங்கேயே அமர்ந்த பின்னர் தான் வெளியேற வேண்டும். இந்த விதிகளின் படி ஜமாத் நிர்வாகிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அமர வைத்து அனுப்பி வைத்தனர்.

ஜமாத் நிர்வாகம் சார்பில் சம்சுதீன், சேட், ச அன்சாரி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முன்னாள் செயலாளர் முகமது பாட்ஷா, உறுப்பினர் அபுதாகீர் ராஜா, சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமதுசபி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் காலை முதல் மாலை வரை இருந்த இந்த ஏற்பாடுகளை கவனித்தனர். தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் செய்தது போல இதர முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்த தடுப்பூசி பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 11 Dec 2021 12:26 PM GMT

Related News

Latest News

 1. வேளச்சேரி
  கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
 2. ஈரோடு
  மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்
 3. கீழ்பெண்ணாத்தூர்‎
  திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ.5 லட்சம்...
 4. ஈரோடு
  அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
 5. திருவொற்றியூர்
  பேரறிவாளன் விவகாரத்தில் எதிர்ப்பை காட்டுவோம்- விஜய்வசந்த் எம்.பி.
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் நடந்து வரும் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
 7. ஈரோடு
  அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 8. போளூர்
  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு
 9. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (22ம் தேதி) நிலவரம்
 10. மயிலாடுதுறை
  பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்