/* */

பிரதமர் பதவி எங்களுக்கு முக்கியமல்ல: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே

congress aim for social justice and democracy காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியோ அல்லது அதிகாரமோ முக்கியமல்ல அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பிரதமர் பதவி எங்களுக்கு முக்கியமல்ல:  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே
X

பெங்களூரில் நடந்த இந்தியா- எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். (கோப்பு படம்)

congress aim for social justice and democracy

இந்தியாவில் கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் பாஜ வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. பாஜ ஆட்சியானது அடுத்த ஆண்டு முடிவடைவதோடு 10 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. 2024 தேர்தலிலும் பாஜ வெற்றி பெற்றால் 3 வது முறை ஆட்சியமைக்கும்.இது இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு சரித்திர சாதனையாக கருதப்படும். இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து மத்தியில் ௩ முறை ஆட்சியில் அமைந்ததில்லை. இதனைத் தடுக்கும் விதமாக பாஜ ஆட்சிக்கு எதிராக ௨௬ கட்சிகள் கூட்டணி சேர்ந்து இதன் முதல் கூட்டத்தினை பாட்னாவிலும், இரண்டாவது கூட்டத்தினை பெங்களூரிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன. இந்த எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு புதியதாக இந்தியா என பெயர் வைத்துள்ளனர். அடுத்த கூட்டமானது கொல்கத்தாவில் நடக்க உள்ளதாக தெரிய வருகிறது.

congress aim for social justice and democracy


congress aim for social justice and democracy

பெங்களூருவில் இரண்டாவது நாள் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”சென்னையில் நடந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே.

congress aim for social justice and democracy


congress aim for social justice and democracy

மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தது அல்ல. மேலும், அந்த வேறுபாடுகள் பெரியதும் அல்ல. ஆகையால் சாமானிய மக்களின் நலனுக்காக, நடுத்தர வர்க்க மக்களுக்காக, இளைஞர்களுக்காக, ஏழைகளுக்காக, பட்டியலின மக்களுக்காக, பழங்குடியினருக்காக, சிறுபான்மையினருக்காக, திரைமறைவில் நசுக்கப்படும் அவர்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக நாம் ஒன்றிணைவோம்" என்று பேசியுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் தங்களின் பிரதமர் வேட்பாளராக யாரையும் நிறுத்தாமல், மக்களை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. தவிர பிரதமர் பதவி முக்கியமல்ல என்று தான் கார்கே கூறியுள்ளாரே தவிர, பிரதமர் பதவி தேவையில்லை என்று அவர் கூறவில்லை. இதுவும் கவனிக்க கூடிய விஷயம் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Updated On: 19 July 2023 7:08 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?