/* */

தேனி அதிமுக வேட்பாளரிடம் குறைகளை கொட்டித்தீர்த்த பொதுமக்கள்

பெண்கள் கூறிய குறைகளை நிறைவேற்றுவதாக தேனி நகராட்சி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா உறுதியளித்தார்

HIGHLIGHTS

தேனி அதிமுக வேட்பாளரிடம் குறைகளை  கொட்டித்தீர்த்த  பொதுமக்கள்
X

தேனி இருபத்தி ஒன்பதாவது வார்டு பள்ளிவாசல் தெருவில் அ.தி.மு.க., வேட்பாளர் ஷீலா வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்.

தேனி நகராட்சி 29வது வார்டு மக்கள் ஓட்டு கேட்டு வந்த அதிமுக வேட்பாளரிடம் தங்களது குறைகளை கொட்டித் தீர்த்தனர்.

தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை பி.ஷீலா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டிற்கு உட்பட்ட பள்ளிவாசல் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருக்களில் ஓட்டு கேட்டுச் சென்றார். வீடு, வீடாக ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவரிடம், அப்பகுதி பெண்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். இந்த குடியிருப்பு உருவாகி 60 ஆண்டுகளை எட்டி விட்டது. பெரும்பாலான வீடுகள் கொட்டகுடி ஆற்றங்கரையில் தான் அமைந்துள்ளது. வெள்ளம் வரும் காலங்களில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் அவலம் உள்ளது. இங்கு வலுவான தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இப்பகுதியில் ரோடு வசதிகளே இல்லை. குறிப்பாக பேவர் பிளாக் ரோடு கேட்டு பல ஆண்டுகளாக முறையிட்டும் பலன்இல்லை.

தேனி நகர் முழுக்க சப்ளையாகும் வைகை குடிநீர் இப்பகுதிக்கு சப்ளையாகவில்லை. இப்பகுதி மக்கள் தற்போது வரை குடிநீருக்கு தவியாய் தவிக்கின்றனர். ஆற்றுக்குள் உள்ள யானைக்குழாய்களில் (குடிநீர் குழாயில் காற்று வெளியேற அமைக்கப்பட்டுள்ள குழாய்) தான் தண்ணீர் பிடிக்கின்றனர். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய சிரமம் குப்பை சேகரிக்க பணியாளர்கள் வருவதே இல்லை. எப்போதாவது ஒருமுறை வந்து 400மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டோரம் நிறுத்திக் கொள்வார்கள். குப்பை வண்டி வந்ததை அறிந்து பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை அள்ளிக் கொண்டு ஓடிப்போய் கொட்ட வேண்டும். நாங்களும் இந்த நகர் பகுதி மக்கள் தானே. எங்களுக்கு ஏன் இப்படி நகராட்சி பாராமுகம் காட்டுகிறது என்றனர் இந்த கோரிக்கைகளை குறித்து வைத்துக் கொண்ட வேட்பாளர் ஷீலா, தான் வெற்றி பெற்றதும், முதல் வேலையாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

Updated On: 8 Feb 2022 7:45 AM GMT

Related News