/* */

ரொனால்டோவை அனுமதிக்காத பயிற்சியாளர் சாண்டோஸ் நீக்கம் !

மொராக்கோ அணியுடன் போர்ச்சுகல் தோல்வியை சந்தித்ததின் எதிரொலியாக, பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளது

HIGHLIGHTS

ரொனால்டோவை அனுமதிக்காத பயிற்சியாளர் சாண்டோஸ் நீக்கம் !
X

பயிற்சியாளர் சாண்டோஸ் உடன் ரொனால்டோ.

2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை பெஞ்சில் அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். அந்த போட்டியின் போதே ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் ரொனால்டோ என மைதானத்திலேயே கோஷத்தை ஏற்படுத்தினர். மேலும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் தென்கொரியாவிற்கு எதிரான அந்த போட்டியில் ரொனால்டோவிற்கு பதிலாகக் களமிறங்கிய மாற்று வீரரான கோன்கலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து 6-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றிப்பெற்றது.

சப்ஸ்டியூட்களுக்கான பிரிவில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அமரவைக்கப்பட்டது குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் ஷாண்டோஸ், எனக்கு என்ன யுக்தி சரியெனபடுகிறதோ, நான் எதை நம்புகிறேனோ அதைத்தான் களத்தில் பயன்படுத்துவேன். என் வாழ்நாள் முழுவதும் அதையே பின்பற்றி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

காலிறுதிக்கான போட்டியில் ரொனால்டோ முதலில் இருந்தே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீண்டும் உடைத்திருந்தார் பயிற்சியாளர் ஷாண்டோஸ். ரொனால்டோ இல்லாத போர்ச்சுகல் அணிக்கு எதிராக முதல் பாதிலேயே ஒரு கோல் அடித்து அசத்தியது மொராக்கோ அணி. பின்னர் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ, போர்ச்சுகல் அணியை இறுதிவரை கோலடிக்கவே விடவில்லை. பிற்பாதிக்கு பிறகு ரொனால்டோ இறக்கப்பட்டாலும் அது போர்ச்சுகல் அணிக்கு கை கொடுக்கவில்லை. இறுதியில் காலிறுதியில் 0-1 என்று தோல்வியடைந்து வெளியேறியது போர்ச்சுகல்.

உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகும் ரொனால்டோவை அமரவைத்ததற்கு வருத்தமில்லை என்று தெரிவித்தார் பயிற்சியாளர் சாண்டோஸ். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்தேன் என்று கூறியிருந்தார்.

உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் வெளியேறியதின் எதிரொலியாக மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸை போர்ச்சுகல் பிரிந்து விட்டதாக போர்ச்சுகல் கூட்டமைப்பு (FPF) அறிவித்துள்ளது. இது அடுத்த சுழற்சிக்கான முக்கியமான தருணம் என்று தெரிவித்துள்ளது. 2024 யூரோ தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஷாண்டோஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் தோற்றதற்காக மிகவும் வருத்தப்பட்ட இரண்டு நபர்களை எடுத்துக் கொண்டால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நானும் தான். நிச்சயமாக நாங்கள் வருத்தப்படுகிறோம், ஆனால் அது பயிற்சியாளர் மற்றும் வீரரின் வேலையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார். 68 வயதான சாண்டோஸ், 2014 இல் போர்ச்சுகல் மேலாளராக பொறுப்பேற்றார் மற்றும் யூரோ 2016ன் இறுதிப் போட்டியில் இவரது தலைமையில் போர்ச்சுகல் பிரான்சை தோற்கடித்து குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா உச்சிமுகர்ந்த முதல் உலகக் கோப்பை இது தான். இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

Updated On: 22 Dec 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    பேருந்துகளில் படிக்கட்டு பயணத்திற்கு வேட்டு: மதுரை ஐகோர்ட் கிளை...