போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்

தேனி மாவட்டம், போடி- மூணாறு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்
X

போடி மெட்டு மலைப்பாதையில் பெய்து வரும் மழையால் மீ்ண்டும் பாறைகள் சரிந்து கிடக்கின்றன.

தேனி-போடி-மூணாறு மலைப்பாதையில் போடி மெட்டு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவுகள், பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத்துறை இதனை உடனுக்குடன் சரி செய்தாலும், மழை தொடர்வதால் மீண்டும், மீண்டும் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று காலை திறக்கப்பட்ட போக்குவரத்து மாலையில் மீண்டும் நிறுத்தப்பட்டது.

தற்போது சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. மழை குறைந்தால் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். மழை பெய்தால் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Nov 2021 3:37 AM GMT

Related News