/* */

யூடியூப்பில் அவதூறு பாடல் நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு

முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கேரள யூடியூப் சேனல்களில் ஒலிபரப்பாகும் பாடல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

யூடியூப்பில் அவதூறு பாடல்  நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு
X

தேனி மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட பாரதீய கிஷான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் சிவனாண்டி, துணைத்தலைவர் ராஜா உட்பட பலர் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர்.

கேரளாவில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதூறு பரப்பும் வகையிலான 3 நிமிட பாடல் ஒலிபரப்பி வருகின்றனர். 13 பேர் இந்த பாடலை தயாரித்துள்ளனர். இந்த பாடலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏதும் அறியாத அப்பாவி மக்களை அச்சப்படுத்தி, அவர்களை முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்பதே இவர்களின் இலக்கு ஆகும்.

தேனி கலெக்டர் தமிழக அரசு மூலம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவதுாறு பாடலை நிறுத்த வேண்டும். இந்த பாடல் தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். கேரளாவில் ஒலிபரப்பபட்டு வரும் இந்த அவதூறு பாடலை நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என மனு கொடுத்த விவசாயிகள் அனைவரும் தெரிவித்தனர்.

Updated On: 9 Aug 2022 9:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...