தண்ணீர் தேடி எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகள்

தேனி மாவட்டம், மேகமலை வனத்திற்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர்தேடி அங்குள்ள எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் வருகின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தண்ணீர் தேடி எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகள்
X

மேகமலை டீ எஸ்டேட்டிற்குள் உலா வரும் காட்டு யானைகள்.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை புலிகள் காப்பகம் மட்டும் சுமார்1100 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதற்குள் பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான வனஉயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக யானை, புலி, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வறட்சி காலங்களில் தாகத்தைத் தணிக்க வனத்துறை ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளது.

ஆனால் அந்த தொட்டிகளில் முறையாக தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இந்நிலையில், யானை, புலி, செந்நாய், கரடி போன்ற வனவிலங்குகள் இங்குள்ள எஸ்டேட்களுக்குள் வருகின்றன. இந்த வனத்திற்குள் ஏராளமான எஸ்டேட்டுகள், பல மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களுக்குள் வற்றாத நீர்த்தேக்கங்கள் அதிகமாக உள்ளன. இதில் நீர் அருந்த அனைத்து வகையான வனவிலங்குகளும் வருகின்றன.

தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகள் அருகில் உள்ள எஸ்டேட் குடியிருப்புகளுக்குள்ளும் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் எந்த நேரமும் உயிரை கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டி நிலை உள்ளது. வனத்திற்குள் வறட்சி முழுமையாக நீங்கும் வரை இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 21 Sep 2021 12:30 PM GMT

Related News