ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டியில், வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலரில் இருந்த, 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை, 48. இவர், இன்று ஆண்டிபட்டியில் வைகை அணை ரோட்டோரம் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், தான் அடகு வைத்திருந்த பத்தரை பவுன் நகையினை திருப்பிக் கொண்டு வந்தார்.

டூ வீலரில் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வைத்திருந்தார். டூ வீலரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பொருள் வாங்க சென்று விட்டு திரும்ப வந்தார். அப்போது அவரது டூ வீலர் பெட்டியை உடைத்து நகை, பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். செல்லத்துரை கொடுத்த புகார் அடிப்படையில் ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2021-10-06T21:14:26+05:30

Related News